• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

செஞ்சிக் கோட்டை ராஜா தேசிங்கு வரலாறு

siddharbhoomi by siddharbhoomi
March 11, 2019
in வரலாறு
0
செஞ்சிக் கோட்டை ராஜா தேசிங்கு வரலாறு
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

செஞ்சிக் கோட்டை வரலாறு

செஞ்சிக் கோட்டை இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது.

மராட்டிய மன்னரான சிவாஜி, “இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புக முடியாத கோட்டைகளுள் சிறந்தது” எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் “கிழக்கின் ட்ரோய்” என்றனர்.

முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும், சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது. இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும்,

இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.

வரலாறு :

செஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில் கி.மு. முதல் கி.பி 6 வரை இங்கு ஜைனர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. பல்லவர் காலத்தில் (கிபி 600-900) சிங்கபுரதில் (சிங்கவரம்)ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்சிக்குத் தெற்கே பனமலைப் பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது.

அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது. இந்த இடம் செஞ்சியில் இருந்து பதினேழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கி.பி.580-630 விசித்ரசித்தன் என அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் ஆளுகையில் செஞ்சி இருந்தது.

மேலும் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்கால கோயில் முலம் செஞ்சி பல்லவர்களின் ஆளுகையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

செஞ்சி கிழக்கு பகுதியில் காணப்படும் கல்வெட்டுகள், செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாகச் சொல்கிறது. 871 முதல் 907 இரண்டாம் ஆதித்ய சோழன் முறையே ஆட்சி செய்திருகின்றனர். அவன் தம்பி ராஜராஜன் சோழன் (987-1014) காலத்தில் சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில், சோழர் ஆட்சிக்காலத்தில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறிய கோட்டை ஒன்று இங்கே இருந்தது. 1014-1190 களின் செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. இங்கிருந்த சிறிய நகரமான செஞ்சியைப் பாதுகாப்பதற்காக, விஜயநகரப் பேரரசுக் காலத்தில், 13 ஆம் நூற்றாண்டில் விரிவாக்கப்பட்டது.

அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை வலிமை பொருந்திய கோட்டையாக மாற்றினர். 13 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பெரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.

குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர். தமிழ் நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமையிடமாகவும் இது விளங்கியது.

வெளியார் படையெடுப்பை முறியடிப்பதற்கு உகந்த இடமொன்றாகக் கருதியே இவ்விடத்தில் இக்கோட்டை கட்டப்பட்டது. மராட்டியர்களிடம் இருந்த இக்கோட்டையை பீஜப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக்கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய (மீட்ட) மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார்.

ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது.

ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது. அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சிறிது காலம் இதனை ஹைதர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தான்.

செஞ்சிக் கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ளடங்கியுள்ளது. 240 மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது.

இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக்கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி ஆகிய குன்றுகள் இருந்தன. இடையேயிருந்த வெளிகள் 20 மீட்டர்கள் அகலம் கொண்ட சுவர்களினால் மூடப்பட்டிருந்தன.

தென் இந்தியாவில் கண் என்று அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக இருக்கும் செஞ்சிக்கோட்டை, விழுப்புரம் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. பண்டையகால மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? என்பதை நாம் வரலாற்றில் படித்து தெரிந்து கொள்கிறோம்.

அதே சமயம், கடந்த கால மன்னர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அவர்கள் வாழ்ந்த, ஆட்சி புரிந்த இடங்களை நேரில் கண்டு, தொட்டு பார்த்து, மகிந்து தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தால். அது எவ்விதம் இருக்கும் என்பதை உணர வேண்டும் என்றால், நீங்கள் செல்ல வேண்டியது செஞ்சிக்கோட்டைதான்.

செஞ்சிக் கோட்டையை ஆட்சி புரிந்த ராஜாதேசிங்கு உள்ளிட்ட வீரமிக்க மன்னர்களைப் போன்று கம்பீரமாக விண்ணை முட்டி நிற்கிறது செஞ்சிக்கோட்டை. கால மாற்றங்களையும், பல்வேறு படையெடுப்புகளையும் முறியடித்து காட்சி தருகிறது செஞ்சிக்கோட்டை.

கடைசி மன்னராக செஞ்சிக்கோட்டையை ஆண்ட ராஜா தேசிங்கு வாழ்ந்த இடம், போரிட்ட இடம், மரணம் தழுவிய இடம், தேசிங்கின் மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறிய இடம் என பார்த்து பரவசம் அடைய ஏராளமான வரலாற்று நினைவிடங்களை தன்வசம் வைத்துள்ளது இந்த இடம். வியப்பில் ஆழ்த்தும் கட்டட கலைக்கு எடுத்தக்காட்டாக கலை நயத்துடன் கல்லில் கட்டப்பட்ட கம்பீரமான கட்டுமானத்தை கண்டு வியப்படையாதவர்களே இல்லை.

தேசிங்கு ராஜன் ஆட்சி செய்த 17-ம் நூற்றாண்டின் வரலாற்றின் காலத்திற்கே நம்மை அழைத்து செல்லும் இடமாக விளங்கி வருகிறது இந்த செஞ்சிக் கோட்டை. இதற்குள் நுழையும் போது நமக்கு தேசிங்கு ராஜாவின் ஆட்சி முறை மற்றும் அந்த கட்டடக் கலையின் நுணுக்கங்கள் பற்றி எடுத்துச் சொல்லவோ அல்லது அதைப் பற்றிய விவரங்களை ஏற்கனவே அறிந்து வைத்துக் கொள்வதோ மிகவும் நல்லது. கோட்டையைப் பார்த்து விட்டு வெளியே வரும்போது நாம் இந்த நூற்றாண்டை அடைந்து விட்டோம் என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்படும்.

ராஜா கோட்டையின் கீழே பார்க்க வேண்டிய இடங்கள் :

சிவன் கோயில், அம்மன் ஆலயம், வேலூர் வாயில், சாதத்துல்லாகான் மசூதி, பாண்டிச்சேரி வாயில், வெங்கடரமணர் ஆலயம், சுழலும் பீரங்கிமேடை, உளி வளிக்கும் கல் பட்டறை, கல்யாண மஹால், முகமதுகான் மசூதி, அரண்மணை வளாகம்,

பணியாளர்கள் தங்கும் அறை, கல்யாண மஹால், குதிரை லாயம், யானைக்குளம், ஆயுதக் கிடங்கு, உடற்பயிற்சி அரங்கம், வெடி மருந்துக் கிடங்கு, நெல் களஞ்சியம், வேணுகோபாலசுவாமி கோயில், ஜும்மா மசூதியின் கலை பாணி,

தேசிங்குராஜன் உடல் எரியூட்டப்பட்ட இடம், ஏழு கன்னிமார் கோயில், சர்க்கரை குளம், செட்டிக்குளம், ஆஞ்சநேயர் கோயில், மரணக்கிணறு ஆகியவை பார்க்க வேண்டிய முக்கிய இடங்களாகும்.

ராஜகிரி மலை மீது பல அற்புதங்களை கொண்ட கலைநயத்துடன் விளங்கும் கட்டடங்கள் கலைநயம் மிக்க கோயில்கள், அரண்மனைகள் மற்றும் பாலரங்கநாதர் கோயில், கமலக்கண்ணி அம்மன் கோயில், சுனை நீர், இழுவை பாலம், மணிக்கூண்டு, பீரங்கி என அற்புதமான இடங்களை கோட்டையின் மீது ஏறிச் சென்று பார்த்து பரவசம் அடையலாம்.

ராணிக்கோட்டை என அழைக்கப்படும் கிருஷ்ணகிரி கோட்டை :

திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ள ராணிக்கோட்டையை அந்த பக்கம் பயணம் செய்வோர் பார்க்காமல் செல்ல முடியாது. அற்புதமான அழகுடன் காட்சி அளிக்கும் ராணிக் கோட்டையைப் பார்க்க பார்க்க அழகுதான்.

இயற்கை எழிலுடன் கட்டப்பட்ட மலைக்கோட்டைதான் ராணிக்கோட்டை. கோட்டை மீது சுழலும் பீரங்கிமேடை, நெற்களஞ்சியம், அரங்கநாதர் ஆலயம், எண்ணெய்க் கிணறு, அழகிய கட்டட கலைநயத்துடன் கூடிய தர்பார் மண்டபம், கிருஷ்ணர் கோயில், மலையடிவாரத்தில் உள்ள பூவாத்தமன் கோயில் என பல இடங்கள் உள்ளன.

வரலாற்றில் செஞ்சி :

தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. மராட்டிய மன்னரான சிவாஜி,

“இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது” எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் “கிழக்கின் ட்ரோய்” என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும், சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் பெயர் வாங்கியது.

இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ. நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.

சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் என்பார்கள் அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம் என்பதற்கு சான்று.

செஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்ட துவங்கினர். அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர். இந்த கோட்டையில் உள்ள

கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

ஜைனர்கள் :

செஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில் கி.மு. முதல் கி.பி 6 வரை இங்கு ஜைனர்கள் வாழ்ந்தனர் என்று கல்வெட்டுக்கள் சொல்கின்றன.

பல்லவர் காலத்தில் செஞ்சி (கிபி 600-900) :

பல்லவர் காலத்தில் சிங்கபுரதில் (சிங்கவரம்) ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்சி தெற்கே பனமலை பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது , அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது,

இந்த இடம் செஞ்சில் இருந்து பதினேழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது , 580-630 பல்லவ மகேந்திரவர்மன் விசித்ரசித்தன் ஆக அழைக்க பட்டார், மேலும் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்கால கோயில் முலம் செஞ்சி பல்லவர்களின் ஆளுகையில்ருந்ததாக சொல்கிறது .

சோழர்கள் காலத்தில் செஞ்சி (900-1103) :

செஞ்சி கிழக்கு பகுதில் காணப்படும் ஆனங்கூர் கல்வெட்டுக்களின் படி செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாக சொல்கிறது 871 முதல் 907 ஆதித்ய சோழன் 2 முறையே ஆட்சி செய்திருகின்றனர்.

அவன் தம்பி ராஜராஜன் சோழன் 1 (987-1014) காலத்தில் சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. பாண்டியர்கள் காலத்தில் செஞ்சி (1014-1190). 1014-1190 களின் செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் சொல்கிறது.

விஜயநகரப் பேரரசுக் காலத்தில் :

13 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பெரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. தமிழ் நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமையிடமாகவும் இது விளங்கியது. மராட்டியர்களிடம் இருந்த இக்கோட்டையை பீஜப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின.

இக்கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய (மீட்ட) மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார். ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான்.

முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்த போதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான்.

பின்னர் இக்கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது. அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சிறிது காலம் இதனை ஹைதர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தான்.

அமைப்பு :

செஞ்சிக் கோட்டை அமைப்பு செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோ மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக்கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது.

இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக்கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி ஆகிய குன்றுகள்

இருப்பிடம் :

மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. சென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது செஞ்சிக்கோட்டை.

விழுப்புரத்தில் இருந்து 37 கிலோ மீட்டரும், திண்டிவனத்தில் இருந்து 27 கிலோ மீட்டர் தூரமும், திருவண்ணாமலையில் இருந்து 38 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. செஞ்சிக் கோட்டையை பார்க்க வருவதற்கு பேருந்து தான் வசதியாக இருக்கும். கோட்டை வாயிலுக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது.

செஞ்சிக் கோட்டை ஆனந்தக் கோனாரால் அமைக்கப்பட்டு பல அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்து பின்னர் பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வசம் இருந்தது. தற்போது இக்கோட்டை மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பில் உள்ளது.

கிருஷ்ணகிரி, சந்திரகிரி மற்றும் ராஜகிரி ஆகிய மூன்று சீரற்ற மலைக்குன்றுகளை மாபெரும் செஞ்சிக்கோட்டையின் மதில்கள் அரவணைத்துக் செல்கின்றன. ராஜகிரி மலை மட்டுமே (800 அடி உயரம்) தனியாக எவற்றோடும் பொருந்தாமல் நிற்கும் குன்று.

போர்வீரர் தங்குமிடங்கள் குதிரைலாயங்கள் :

உயரம் குறைந்த கவிகை மாடங்கள். வளைவு வளைவான நுழைவாயில்கள், தனியறைகள், குதிரைகள் இளைப்பாறவும் போர்வீரர்கள் தங்கவும் கட்டப்பட்டுள்ளன. கல்யாண மகாலுக்கு அருகிலுள்ள இந்த கவின்மிகு அறைகளில் தொல்பொருள் ஆய்வுத்துறையின் பயிற்சி முகாம் அமைக்ப்பட்டுள்ளது.

யானைக்குளம் :

போர் வீரர் குடியிருப்பு வரிசைக்கு தெற்கில் உள்ள யானைக்குளம் மாடங்கள் அழகின் ரகசியங்கள்.

சதத் உல்லாக்கான் மசூதி :

சதத் உல்லாக்கான் எழுப்பிய மசூதி. தேசிங்குராஜனை போரில் வென்று கோட்டையைக் கைப்பற்றியதன் நினைவாக கட்டப்பட்டது. கி.பி. 1717 – 18 இல் எழுப்பப்பட்டதாகப் பார்சிய கல்வெட்டு தெரிவிக்கிறது.

நெற்களஞ்சியம் – உடற்பயிற்சிக்கூடம் :

விஜய நகர கட்டடக் கலை பாணியில் அமைந்த செஞ்சிக் கோட்டையின் பெருமை மிகு கட்டடங்கள் ராஜகிரி மலையின் கீழ் கல்யாண மகாலுக்கு அருகிலுள்ள நெற்களஞ்சியம் பிரமாண்டமானது. தாராளமான நுழைவாயிற் பகுதி. இதன் சுவர்கள் மூன்று மீட்டர்.

பீப்பாய் போன்ற அரை வட்ட கவிகை மாடத்தை நெற்களஞ்சியத்தின் வடகிழக்கில் காணமுடியும். உடற்பயிற்சி செய்யவும் நெற்களஞ்சியக் கட்டடம் பயன்பட்டதாக சொல்லப்படுகிறது.

வெங்கட்ரமணா கோயில் :

பரந்து விரிந்துள்ள கோயில், இங்குள்ள முனைப்பான தூண்களும், அழகு மிகு சிற்பங்களும் நாயக்கர்களின் அழகியல் தன்மையை எடுத்துக் காட்டுகின்றன.

வேணு கோபாலஸ்வாமி கோயில் :

கலை எழில் மிகுந்த சிற்பங்கள் நிறைந்த கோயில் இது. கிருஷ்ணன் புல்லாங்குழல் இசைப்பது, அவரை கயிறு கட்டி இழுப்பது போன்ற சிற்பங்கள் இங்குள்ளன. இந்தக் கோயிலின் முகப்பு வாயிலில் மிகச் சிறந்த பூச்சு வேலையோடு மெருகேற்றப்பட்ட மென்மையான தளம் உள்ளது. இது வேணுகோபாலஸ்வாமி கோயிலின் சிறப்புத் தன்மையை பறைசாற்றுகிறது.

ராஜகிரி மலைகோட்டை :

இந்தோ – இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்ட அரச தர்பார் மண்டபம் இம்மலையின் உச்சியில் உள்ளது. மேல் வளைவுகள் வரிசையாக அமைய, குவிமாடம் மூடிய கூரை என்று இம்மண்டபத்தின் வடிவமைப்பு உள்ளது.

ரசிக்கத்தக்க மற்றொரு கட்டடம் போர்த் தளவாடக் கிடங்கு, இம்மலை மீது நாயக்கர் கால கட்டடக் கலையமைப்பைக் கொண்ட ரெங்கநாதர் கோயில் ஒன்றும் இருக்கிறது. இங்கு சென்றால் 4 மீட்டர் நீளமும் 2 மீட்டர் சுற்றளவும் கொண்ட பெரிய இரும்பு பீரங்கி ஒன்றையும் பார்த்து வரலாம்.

கிருஷ்ணகிரி கோட்டை :

ராஜகிரியின் வடக்கேயுள்ள மலைக்குன்றில் கருங்கல் பாறைகளின் மீது அமைந்துள்ள கிருஷ்ணகிரி கோட்டை. கற்படிகள் வழியாக நடந்து கோட்டையை அடையலாம். இங்கு காண்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன.

இரு பிரமாண்டமான தானியக் களஞ்சியக் கட்டடங்கள், தூண்களில் உருவான மண்டபம், இரண்டு கோயில்கள், செங்கல் மாளிகை, வட்டமான பார்வையாளர் தர்பார் மற்றும் சிறு பீரங்கியும் உள்ளன.

சிங்கவரம் கிராமம் :

செஞ்சி அருகில் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிங்கவரம் கிராமம். இது பல்லவர் காலத்தில் சிங்கபுர நாட்டின் தலைநகராக இருந்தது. முதலாம் மகேந்திர வர்மன் தந்தை சிம்ம விஷ்ணுவின் காலத்தில் இந்த நகரம் ஏற்பட்டிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது , இது செஞ்சிக்கு வடக்கே ஐந்து கிமீ தூரம் உள்ளது இக்கோயில் மலையின் மேல் இருப்பதால் 125 படிகளைக் கடக்க வேண்டும் எல்லோரா போல் ஒரே பாறையைக் குடைந்து செய்யப்பட்டக் கோயில், இந்தப் பாறையிலேயே முன்புறம் இரு தூண்கள் மிகப்பெரிய அளவில் நிற்க உள்ளே நீண்ட கருவறை தெரிகிறது அங்கு ஆதிசேஷன் சுருண்டு கிடக்க அந்தப்படுக்கையில் அனந்த சயனமாக அரங்கன் சயனித்திருகிறார்.

தலையைச் சற்று தூக்கியவாறு, வலது திருக்கரத்தைக் கீழே தொங்க விட்டபடி, இடது கையை மேற்புறமாக மடித்து, கடக முத்திரையைக் காட்டி ஐந்து தலை நாகத்தின் மேல் திருமால் அழகுற நித்திரை கொண்டுள்ளார்.

காஞ்சிபுரத்தைப் போன்று செஞ்சியும் இரு பிரிவாக இருந்துள்ளது. தற்போது உள்ள செஞ்சி “சிவ செஞ்சி” என்றும், சிங்கபுரம்-மேலச்சேரி இணைந்திருந்த பகுதி “விஷ்ணு செஞ்சி” என்றும் அழைக்கப்பட்டதாக கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன.

ஒரே கல்லில் குடைந்து இந்தப் பெருமாள் திருமேனியை வடித்துள்ளனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதரைவிட, இந்த ரெங்கநாதர் நீளமானவர் என்று கருதப்படுகிறது. சிங்கவரம் ரெங்கநாதர் 24 அடி நீளத்திற்கு பள்ளி கொண்டுள்ளார். அவரும், பள்ளியறையும் ஒரே கல்லில் உருவானவை. மகேந்திரவர்ம பல்லவனின் கலை ஆர்வத்தில் விளைந்த அற்புதம் இது.

மிகப் பெரிய பெருமாளான இவரை மூன்று வாயில்கள் வழியாகச் சென்றுதான் முழுமையாகத் தரிசிக்க முடியும். முதல் நிலையில் பெருமாள் திருமுகம், மேலிருக்கும் பஞ்சமுக ஆதிசேஷன், வலது திருக்கரம், இடது திருக்கரம், கந்தர்வ பிரம்மா, மார்பில் மகாலட்சுமி ஆகியோரை தரிசிக்கலாம்.

மத்திய பாகத்தில் ஸ்ரீகருடன் தரிசிக்கலாம். மூன்றாம் நிலையில் திருவடி, அதன் கீழ் பூமாதேவி, நாரதர், பிரகலாதன், பிருகு – அத்திரி என்ற முனிவர்கள் ஆகியோரை தரிசிக்கலாம்.

ஸ்ரீ வரதராஜப் பெருமாளையும் பூதேவி, ஸ்ரீதேவியுடன் தனி சந்நிதியில் தரிசிக்கலாம். தாயார் ரங்கநாயகி தனியே அருள் பாலிக்கிறார். ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகன் சிலை வடிவமும் உள்ளது. இக்கோயிலில் “சந்திர புஷ்கரணி” என்ற வற்றாத தீர்த்தக் குளம் இருக்கின்றது.

மலை மீது சுற்றி வரும் போது லட்சுமி தீர்த்தம், ராமர் தீர்த்தம், வெயில் படாத சுனை ஆகியவற்றைக் காணலாம். மேலும் செஞ்சி அரச குடும்பத்தினர் வருவதற்கு, செஞ்சிக் கோட்டையில் இருந்து இக்கோயிலுக்கு வரும் சுரங்கம் ஒன்றும் உள்ளது. அதை இப்போதும் காணலாம்.

மேலும் முஸ்லீம் படையெடுப்பின் போது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் உற்சவ மூர்த்தியை சிறிது காலம் தேசிங்கு ராஜா பாதுகாப்பில் சிங்கவரம் ரங்கநாதர் ஆலயத்தில் வைத்திருந்தனர்; பின்னர் காஞ்சியில் அமைதி திரும்பியதும் மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இதன் விளைவாகவே இக்கோயிலில் ஸ்ரீ வரதராஜர் சந்நிதி அமைக்கப்பட்டதாம்.

வைகுண்ட ஏகாதசி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து தரிசித்து மகிழ்கின்றனர். மாசி மகத்தன்று புதுச்சேரி கடற்கரையில் சிங்கவரம் ரங்கநாதருக்கு தீர்த்தவாரி நடைபெறும். 800 ஆண்டுகளாக இத்த வைபவம் செஞ்சி சிங்கவரம் ரங்கநாதருக்கு நடைபெறுவதாகத் தகவல்.

ராஜா தேசிங்கு வரலாறு :

செஞ்சிக்கு புகழ் வரக்காரணமாக இருந்தவர் ராஜா தேசிங்கு, இவரைப் பற்றி எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களும், கதைகளும் உண்டு. மராத்தியர்கள் சிவாஜி தலைமையின் கீழ் வீறுக் கொண்டு எழுந்து அவுரங்கசீப்பிற்கு குடைச்சல் கொடுத்து பெறிய சாம்ராஜ்யத்தினை நிறுவ முயன்றார்கள் அப்பொழுது மரத்தாவிலிருந்து , கொண்கன் கடற்கரை வழியாக கர்னாடக, தமிழகம் என படை எடுத்து தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.

மராத்தியர்களை அழிக்க வேண்டும் என்று அவர்கள் செல்லும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து படைகளை அனுப்பி கொண்டு இருந்தார் அவுரங்கசீப். இதற்கிடையே சிவாஜி மறைந்து விட அவரது மகன் ராஜாராம் தொடர்ந்து போரிட்டார் ஆனலும் ஒரு நிலைக்கு மேல் சமாளிக்க இயலாமல் தமிழகத்திற்கு தப்பி வந்து செஞ்சிக் கோட்டையில் பதுங்கினார்.

அவரைப் பிடிக்க பெரும் படையை அவுரங்கசீப் முகமூத்கான் என்பவர் தலைமையில் அனுப்பினார். முகமூத்கானினின் படையில் குதிரைப்படை தலைவராக இருந்தவர் சொரூப்சிங். 11 மாத கால முற்றுகைக்கு பின்னர் கோட்டையை அவுரங்கசீப்பின் படைக் கைப்பற்றியது,

போரில் தீரத்துடன் செயல்பட்டதால் சொருப்சிங்கின் வசம் கோட்டையை ஒப்படைத்து, அந்த பகுதியினை நிர்வகித்து வர சொல்லிவிட்டார் அவுரங்கசீப். இதற்கிடையே அவுரங்கசீப்பும் மறைய ஷாஆலம் என்பவர் தில்லி சுல்தான் ஆனார்.

சொரூப்சிங் அவரது மனைவி ரமாபாய் அவர்களுக்கு பிறந்த வீரன் தான் தேசிங்கு. ஷாஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டு குதிரையை யாராலும் அடக்க இயலவில்லை எனவே குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப்சிங்கை தில்லி வர சொன்னார் சுல்தான், அவருடன் துணையாக 18 வயதே ஆன ராஜாதேசிங்கும் சென்றான்.

தந்தையால் குதிரையை அடக்க இயலவில்லை எனவே தனக்கு ஒரு வாய்ப்பு அளித்துப் பார்க்க சொல்லி தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான், வாய்ப்பளிக்கப்பட்டது அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்துக் காட்டினான். அக்குதிரையின் பெயர் பரிகாரி.

தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரையையே பரிசளித்து விட்டார் சுல்தான். அது மட்டும் அல்ல இன்னொரு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் மணமுடித்து வைத்தார். தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய் (இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை).

செஞ்சி அருகில் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிங்கவரம் கிராமம். சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது. அரங்கன் தான் தேசிங்கு ராஜாவின் தெய்வம், எந்த வேலைச்செய்தாலும் இந்த அரங்கனிடம் சொல்லிவிட்டு தான் செய்வாராம். தேசிங்கு ராஜன் தன் செஞ்சிக்கோட்டை அரண்மனையிலிருந்தே அந்தக் கோயிலுக்குச் செல்ல சுரங்கப்பாதை அமைத்தாராம்.

அவனது ராணியும் மற்றத் தோழிகளும் பாதுக்காப்பாகச் செல்லவும் இந்தச் சுரங்கம் உதவப்பட்டது. எந்தப் போருக்குச் சென்றாலும் தேசிங்கு அரங்கனிடம் உத்தரவு பெற்றபின் தான் செல்வாராம். செஞ்சியை ஆண்ட மாவீரன் தேசிங்கு ராஜன், ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த ஸ்ரீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்ட போது அரங்கன், “இன்று போருக்குச் செல்ல வேண்டாம்.

நாளை செல்” என்று கூறினாராம். தேசிங்கோ, “எதிரியின் படைகள் எல்லையை அடைந்து விட்டதே… முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா?” என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம். போரில் தேசிங்கு, சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் வீர மரணம் அடைந்தார்.

இதனைஅறிந்த அவர் மனைவியும் உயிரை விட்டாள், நீலாம்பூண்டி கிராமத்தில் தேசிங்கு ராஜனின் சமாதியும் படைத்தளபதி முகம்மதுகானின் சமாதியும் இருக்கின்றன கூடவே அவனது உயிருக்குக்குயிராய் நேசித்த குதிரை நீலவேணி குதிரையின் சமாதியும் இருக்கிறது.

தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, மேற்கு தமிழகத்தில் வலிமையான கோட்டை கொத்தளம் உடைய அரசியல் களம் என்றால் அது செஞ்சி தான். சென்னை,வேலூர் கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி.

சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி , சிங்கபுரி கோட்டம் என்பார்கள் அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கபுரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம் என்பதற்கு சான்று.

ஆடு மேய்க்கும் ஒருவர் அந்த வழியே சென்ற முனிவருக்கு பசிக்கு உணவளித்ததால் இங்கே புதையல் உள்ளது என செஞ்சிமலைப் பகுதியை காட்டி சென்றார் அதனை எடுத்த ஆடு மேய்ப்பவர் அந்த பணத்தைக் கொண்டு கட்டிய கோட்டை தான் செஞ்சிக்கோட்டை என்பார்கள்.

புதையல் பணத்தில் கோட்டை கட்டியவர் பெயர் ஆனந்த கோன், அவரது மகன் கிருஷ்ணக் கோன் தான் கிருஷ்ண கிரி உருவாக காரணமாக இருந்தார்.

கங்கைகொண்ட சோழபுரத்துக்கு அருகே மாளிகை மேடு என்ற இடத்தில் சோழர்களின் அரண்மனை இருந்ததாக சில அடையாளங்கள் காணப்படுகின்றன. மற்றபடி, வட இந்தியாவில் காணப்படுவது போன்ற கோட்டை கொத்தளங்களை தமிழகத்தில் காண முடியாது.

வேலூர் கோட்டையும் செஞ்சிக் கோட்டையும்தான் தமிழக அளவில் பெரிய கோட்டைகள். இவையன்றி திருமயம் கோட்டை, திண்டுக்கல் கோட்டை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை, மனோரா கோட்டை, ஆலம்பரக்கோட்டை, சங்ககிரி கோட்டை, வட்டக்கோட்டை போன்றவை அளவில் சிறிய, சிதைவுற்ற நிலையில் உள்ள கோட்டைகளாகும்.

செஞ்சியும் வேலூரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டைகள். வேலூர் கோட்டையில்தான் சுதந்திரப் போரின் முதற்புள்ளியான சிப்பாய் எழுச்சி ஏற்பட்டது. செஞ்சி, மாவீரன் சிவாஜி காலத்தில் இருந்தே வீர வரலாறு கொண்டது.

புந்தேலர் இனத்தின் தலைவரான சரூப் சிங்கின் மகன் தேஜ் சிங் என்றால் நம்மில் பலருக்குத் தெரியாது. அவர்தான் செஞ்சியை ஆண்ட தேசிங்கு ராஜா. தேஜ் சிங் என்ற பெயரைத்தான் தேசிங்கு என்று எளிமையாக மாற்றி விட்டனர் மக்கள். ஒரு ராஜபுத்ர வம்சத்தைச் சேர்ந்த மன்னர் தமிழ் மக்களின் மனதில் காவிய நாயகராக விளங்குவது வியக்கத்தக்க ஒன்று.

தேசிங்கு ராஜன் பராக்கிரமத்துடன் செஞ்சியை ஆண்ட கதையைப் பற்றி தேசிங்கு ராஜன் கதைப் பாடல் சுவாரஸ்யமாக விவரிக்கிறது. அதில் பாதிக்கும் மேல் வரலாற்றோடு தொடர்பு இல்லாத கற்பனை. சுவாரஸ்யத்துக்காக உருவாக்கப்பட்டவை. அதில் ஒன்றுதான் தேசிங்கு ராஜன் டெல்லிக்குப் போய் முரட்டுக் குதிரையை அடக்கி வெற்றி கண்டது. வரலாற்றில் அப்படியான சம்பவம் எதுவும் நடக்கவில்லை.

தேஜசிங் எப்படி செஞ்சியின் அரசன் ஆனார் என்பதை அறிந்துகொள்ள, புந்தேலர் இனத்தின் வரலாற்றை முதலில் தெரிந்து கொள்வோம். புத்தேல்கன்ட் என்பது இன்றுள்ள மத்தியப் பிரதேசம். இங்கு வாழ்ந்த ரஜபுத்ரர்களுக்கும் மொகலாயர்களுக்கும் நெடுங்காலமாகவே இணக்கமான உறவு இருந்தது.

இங்கு வாழ்ந்த மக்கள், கார்வார் ராஜபுத்ரக் குடியைச் சேர்ந்தவர்கள். இவர்களின் முதல் தலைநகரம் பேட்வா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஊரிச்சா. இந்த நகரம் 1531-ல் நிறுவப்பட்டது.

ஒளரங்கசீப் படையெடுப்பின் போது புத்தேலர் இனத்தைச் சேர்ந்த பலரும் படைப் பிரிவில் பணியாற்றினர். சிவாஜியின் மகன் ராஜாராம், மொகலாயர் படையிடம் இருந்து தப்பி செஞ்சியில் தஞ்சம் அடைந்தார். அவனைப் பிடிக்க சுல்பிகர் கானின் தலைமையில் ஒளரங்கசீப் ஒரு படையை அனுப்பி செஞ்சியை முற்றுகையிடச் செய்தார்.

எட்டு ஆண்டுகள் நடந்த முற்றுகைப் போருக்குப் பிறகு, 1698-ல் செஞ்சி பிடிபட்டது. அதன் பிறகு, செஞ்சிக் கோட்டையின் தலைவராக சரூப் சிங் நியமிக்கப்பட்டார்.

சரூப் சிங்கின் தந்தை நரசிங்க தேவ். இவர், அக்பரின் நண்பர். அரசியல் காரணங்களுக்காக, அக்பரின் ஆன்மிகக் குருவான அபுல்பாசலைக் கொன்றவர் நரசிங்க தேவ். ஒளரங்கசீப் 1707-ல் இறந்தபோது அடுத்து அதிகாரத்தில் யார் அமர்வது என்ற அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

அதைப் பயன்படுத்திக் கொண்ட சரூப் சிங், அது வரை கர்நாடக நவாபுக்குச் செலுத்திவந்த கப்பத் தொகையை நிறுத்தி விட்டார். வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் நாடு பிடிக்கும் ஆசையில் அரசியல் சூழ்ச்சிகளில் ஈடுபடுவதை உணர்ந்து, அவர்களையும் பகைத்துக் கொண்டார். ஆகவே, அவரது ஆட்சி நெருக்கடிக்கு உள்ளானது.

1714-ம் ஆண்டு சரூப் சிங் இறந்த பிறகு, அவருடையை மகன் தேஜ் சிங் செஞ்சிக் கோட்டையின் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 22. தேஜ் சிங்குக்கு, ரூப் சிங் என்ற இன்னொரு பெயரும் உண்டு.

தனது தந்தையின் காலத்தில் வாங்கிய கடனுக்கு அநியாய வட்டி போட்டு மொத்தத் தொகையையும் ஒரே நேரத்தில் திருப்பித் தர வேண்டும் என்று, ஆற்காடு நவாப் ஆள் அனுப்பினார். தேஜ் சிங் அதை ஏற்றுக் கொள்ள மறுத்ததோடு அது வரை ஆற்காடு நவாபுக்குச் செலுத்தி வந்த கப்பத் தொகையை இனிமேல் செலுத்த முடியாது என்று மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நவாப், லாலா தோடர்மால் தலைமையில் தனது படையை அனுப்பி செஞ்சியில் திடீர் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார். தேசிங்கு ராஜா, தானும் போருக்குத் தயாராகி சேத்துப்பட்டில் எதிரியைத் தாக்க முனைந்தார்.

ஆனால், ஆரணியோடு நவாப் சேர்ந்து கொண்டதால் நிலைமை மாறியது. 1714-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி தேவனூர் என்ற இடத்தில் போர் தொடங்கியது. தேசிங்கு ராஜாவின் கை ஓங்கிய நேரத்தில், சுபாங்கி என்பவன் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டதில் தேசிங்கு ராஜா வீர மரணம் அடைந்தார்.

தேசிங்கு இறந்தவுடன் அவனது மனைவியும் உடன்கட்டை ஏறிவிட்டார். அவரது நினைவாகவே இராணிப்பேட்டை என்ற ஊர் உருவாக்கப்பட்டது. தேசிங்கு ராஜனின் சமாதியும் அவனது படைத் தளபதி முகம்மது கானின் சமாதியும் நீலாம்பூண்டி கிராமத்தில் இருக்கின்றன என்கிறார்கள் செஞ்சிவாசிகள்.

கடந்த காலத்தின் நினைவுகளை தனக்குள் புதைத்துக் கொண்டு வலிமை வாய்ந்த செஞ்சிக் கோட்டை இன்றும் கம்பீரமாகவே நிற்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மூன்று மலைகளை ஒருங்கே கொண்டது. அவை, முக்கோண வடிவில் அமைந்து உள்ளன. இதில், ராஜகிரி என்ற மலையின் உயரம் 242 மீட்டர். இது அரண் போன்றது. வடக்கே காணப்படுவது கிருஷ்ணகிரி மலை. தெற்கே இருப்பது சந்திரகிரி மலை. இந்த மூன்று மலைகளையும் இணைத்து சுமார் 60 அடி அகலத்தில் உயரமாக சுவர் கட்டப்பட்டு உள்ளது. இதன் வெளிப் பக்கத்தில் 80 அடி அகலமான ஓர் அகழியும் அமைந்து இருக்கிறது. இந்தக் கோட்டையின் சுற்றளவு ஐந்து மைல்கள். இந்தக் கோட்டைக்குள் பெரிய கோயில், கல் மண்டபம், சிறைக்கூடம், அகலமான குளம், படை வீரர்கள் தங்கும் பகுதி, நெற்களஞ்சியம் போன்றவையும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கீழ்க்கோட்டைக்குச் செல்ல இரண்டு வாசல்கள் இருக்கின்றன. வடக்கே உள்ள வாசல் வேலூர் வாசல் என்றும், கிழக்கில் உள்ளது புதுச்சேரி வாசல் என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டில் எந்த வழியாகச் சென்றாலும், 24 அடி அகலமும் 60 அடி ஆழமும் கொண்ட ஒரு கணவாயைத் தாண்டிச் செல்ல வேண்டும். மலையின் உச்சியை அடைவதற்கு முறையான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தக் கோட்டையில் வற்றாத சுனை ஒன்று இருக்கிறது. ராஜ கிரியின் உச்சியில் அரங்கநாதர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. கீழ்க்கோட்டையில் ஒரு பள்ளிவாசலும், வெங்கட்ரமண சுவாமி கோயிலும் இருக்கிறது. கோட்டையில் இருந்து இரண்டரை மைல் தூரத்தில் சிங்கவரம் என்ற ஊர் இருக்கிறது. இங்கே குடைவரைக் கோயில் உள்ளது. செஞ்சிக்கோட்டையை ஆனந்த கோன் என்ற மன்னர் 12-ம் நூற்றாண்டில் கட்டியதாகச் சொல்கின்றனர். விஜயநகரப் பேரரசுக் காலத்தில்தான் இந்தக் கோட்டை முழுமையாக வலிமை பெற்றது. 1464-ம் ஆண்டு செஞ்சியில் வேங்கடபதி நாயக்கர் காலத்தில் முதன்முதலாக நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது. விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னால் இதை, பிஜப்பூர் சுல்தான் கைப்பற்றி கில்தார் என்ற படைத் தலைவனை செஞ்சிக்குப் பொறுப்பாளராக நியமித்தார்.

Previous Post

பக்குவம் 1 – கவியரசு கண்ணதாசன்

Next Post

பக்குவம் 2 – கவியரசு கண்ணதாசன்

Next Post
பக்குவம் 2 – கவியரசு கண்ணதாசன்

பக்குவம் 2 – கவியரசு கண்ணதாசன்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

ஒரு முறை ஒரு நாட்டு அரசன்

December 5, 2025
மன நோய் தான் உடல் நோய்க்குக் காரணமாகின்றது

மன நோய் தான் உடல் நோய்க்குக் காரணமாகின்றது

December 5, 2025
உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »