முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்!
வருவாய் வருவாய் என்றால்
பரிவோடு வாரயோ!
ஒரு கால் முறை செய்தாலும்
நின் பதம் நினைந்தாலும்
அருளே தந்திடும் கந்தா!
தெரியாது நான் செய்த பிழையால்
நீ வெறுத்தாயோ!
அன்பே வடிவம் கொண்ட அழகா
நீ சினந்தாயோ!
சிறியேன் என் குறையெல்லாம் பொறுத்தே அருள் செய்வாய்!
செந்தில் மாநகர் வாழும்
தேவாதி தேவனே!
முருகா சரணம்











