ராமன் என்றால் ரம்மியமானவன் அதாவது இனிமையானவன் என்று பொருள்.
நமச்சிவாய நாமம் ஓதி சிவ நினைவோடு காசியில் இறப்பவர்களுக்குப் பிறப்பு நீக்கிப் பிறவா நிலையாகிய இனிய முக்தி அளித்து சிவ கணமாக்கி சிவலோகத்தில் சேர்ப்பதால் விஸ்வ நாதருக்கு ராமன் (ரம்மியமானவன்) அதாவது இனியவன் என்று பெயர் .
காசிக்கு அவிமுக்தம் என்று பெயர்.
🌻 பறக்கின்ற ஒன்று பயன் உற வேண்டில்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
பிறப்பு ஒன்று இலாமையும் பேருலகு ஆமே (திருமந்திரம்)
🌻 எப்போதும் இனியானை (அப்பர்)
🌸 எனக்கு இனிய எம்மானை ஈசனை யான் என்றும் மனக்கு இனிய வைப்பாக வைத்தேன் (காரைக்கால் அம்மையார்)
🕉️ எனக்கு இனியவன் தமர்க்கு இனியவன்
எழுமையும் மனக்கு இனியவன் ( சுந்தரர்)
🕉 கண்ணுக்கு இனியானை (திருவாசகம்)
என்பவை ஈசனை நேரில் கண்டு வாழ்ந்த அருளாளர்களின் தெய்வீகத் திருமுறை வரிகள்.
சிவ சங்கரன் என்பது போல் சிவ ராமன் என்பது ஈஸ்வரன் நாமம்.
சிவ என்பது போல் விஸ்வ நாதரின் ராம என்ற இந்தத் திரு நாமமே தாரக மந்திரம் எனப்படுகிறது.
☘. அர்ச்சகர்கள் காசியில் சுயம்பு லிங்கத்திற்கு வில்வ அர்ச்சனை செய்யும் போது இலையில் ராம என்று சந்தனத்தால் எழுதி அர்ச்சிக்கின்றனர்.
காசி விஸ்வ நாதர் பெயரான இந்தத் தாரக மந்திரமே
ஜம தக்கினி மைந்தன், தசரத மைந்தன் ஆகிய இருவருக்கும் பெயராகச் சூட்டப்பட்டுப்
பின்னர் பரசு ராமன் என்றும் ,
கோதண்ட ராமன் மற்றும் அதர்மமான வாலி வதம் காரணமாக ராமச்சந்திரன் என்றும் பெயர் பெற்றார்கள்.
ஆதலால் நாராயணாவில் ரா வும் நமச்சிவாயத்தில் ம வும் சேர்த்து ராம என்று தசரத மகனுக்குப் பெயர் சூட்டப்பட்டது என்பது வாய் கூசாமல் சொல்லப்படும் அர்த்தமற்ற கட்டுக் கதையே.
இவ்வாறு இராமனையும் கண்ணனையும் அம்பாளையும் பிள்ளையாரையும் முருகனையும் பற்றி கூறப்படும் கட்டுக் கதைகளுக்கு அளவில்லை.
நந்தி மேல் இருபால் அலிப்பெருமான் எனப்படும் *ஒருமை பெண்மை உடைய தோடுடைய செவியனாக வந்த சீர்காழி பிரமாபுரப் பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு ஈசனைத் தவிரபிறப்பு வளர்ப்பு இறப்பு உள்ள உயிரினமான அம்பாள் உள்ளிட்ட வேறு யாருக்கும் அறவே இடம் இல்லாத திருஞான சம்பந்தர் சோமாசி மாற நாயனார் முதலிய தெய்வீக நாயன்மார் வரலாற்றிலும் மனம் போனபடிப் புகுத்தி ஆண்டவன் அபச்சாரமும் அடியார் அபச்சாரமும் செய்கின்றனர்.











