எதற்காகவும் அஞ்சாதே – அன்பு குழந்தையே …
எதற்காகவும் அஞ்சாதே. உனக்கான சோதனைக்காலம் முடிந்துவிட்டது.
வாழ்க்கை என்பது நீ நினைக்கும் அளவுக்கோ பயப்படும் அளவுக்கோ அல்லது குழப்பம் நிறைந்தது அல்ல.
இங்கு எதுவும் நிரந்தரம் அல்ல. கஷ்டங்களோ சந்தோஷங்களோ எல்லாம் ஒரு நாள் வந்த வழி எதுவோ அதே வழியில் திரும்ப தான் செய்யும்.உன்னை எதிர்மறையாக்கும் எந்த ஒரு நிகழ்வுக்கும் நேர்மறையாய் மட்டுமே உன்னை வெளிப்படுத்து.
உன்னை அரவணைக்க யாரும் இல்லை என்று வருந்தாதே உயிருக்கு உயிராய் உன்னை நான் பாதுக்காக்கிறேன்.அதனால் நீ எதற்கும் பயப்படாதே கலங்காதே உன்னில் நிச்சயம் வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன்.
உன் நம்பிக்கை பொறுமை எதையும் எதிர் நோக்கி தாங்கும் உணர்வு உன் பலத்தையும் உன் விசுவாசத்தையும் எவ்வளவு உன்னதமானது என்பதை நான் அறிவேன்.
வாழ்க்கையின் பக்குவத்தை முழுமையாக நீ அறிய வேண்டும், நீ பயணிக்கும் வழியில் என் துணை நிச்சயம் இருக்கும்.
ஆனால் வழியில் முட்களும் இருக்கும். நீ என்னதான் கவனமாக பார்த்து பார்த்து நடந்தாலும், சில முட்கள் உன்னைக் காயப்படுத்தும். காயம் வலியை உண்டாக்கும். ஆனால், அந்த வலியை நீ தூக்கி எறிந்து, தொடர்ந்து நடைப்போட்டு பயணித்தால், இறுதியில் உன் கால்கள், மலர்கள் நிறைந்த செம்மையான பாதையில் பயணிக்கும்.
சகலசெளபாக்கியமும் பெற்று சீரும் சிறப்புமாய் நீ வாழ்வாய்.
உன் வேண்டுதல்கள் எல்லாம் பலிக்கும். உனக்கு எல்லா சூழ்நிலைகளிலும் நான் துணை நிற்பேன்.
எனவே கவலைகொள்ளாதே… நம்பிக்கையோடு செயல்படு…
நீ எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் உனக்கு வெற்றி நிச்சயம்.
என் வார்த்தைகள் மீது நம்பிக்கை வைத்து செயல்படு…
கவலைபடாதே நான் இருக்கிறேன் உன்னோடு என்றும் என்றென்று….
நல்லதே நடக்கும்..!
என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை நீ !
#ஓம் #ஸ்ரீ #சாய் #ராம்











