• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

2026 தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்

siddharbhoomi by siddharbhoomi
April 13, 2026
in ஜோசியம்
0
2026 தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்

2026 தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

2026 தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்

மங்களகரமான  ஶ்ரீ பராபவ வருஷத்திய (2026-2027) தமிழ்ப் புத்தாண்டு வருட பிறப்பு 14-04-2026  சித்திரை திங்கள் 01 செவ்வாய்க்கிழமை,இந்த ஶ்ரீ பராபவ புத்தாண்டு மாக பிறப்பு காலை 08, 55 ஜெகத் உலக ஜாதக் பிறப்பு நக்ஷத்திரம் சதயம் 4-ம் பாதம் கும்பம் ராசி ஆகும்.ரிஷபம் லக்கினம் ஆகும். அம்சையில் மேஷம் லக்கினம் கும்பம் ராசி ஆகும்.புத்தாண்டு  பிறக்கிறது

ஶ்ரீ பராபவ வருடம்  இந்த ஆண்டு சித்திரை 1 (14.04.2026) செவ்வாய்க்கிழமை, செவ்வாய் கிழமையில் பிறப்பதால், இது ஒரு முக்கியமான ஆண்டாகக் கருதப்படுகிறது.

‘‘தலைநாள் பூத்த பொன் இணர்வேங்கை’’ என்றும், பழமொழி நானூறு ‘‘கணிவேங்கை நன்னாளே நாடி மலர் தலால்’’ என்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே தலைநாளாகக் கருதப்பட்டது. சித்திரையை “தலை மாதம்” என்றும் பங்குனியை “கடை மாதம்” என்றும் சொல்லும் வழக்கம் உண்டு

சித்திரை மாதம் வருடத்தின் முதல் பருவமான வசந்த காலத்தின் முதல் மாதம். வண்ண வண்ண மயமாக பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதம். இந்த மாதத்திற்கு அதிதேவதை விஷ்ணு. விஷ்ணு என்றால் எங்கும் நிரம்பியுள்ளவர். அதிக ஒளி உடையவர் என்று பொருள். பகவத் கீதையில் பருவ காலங்களில் நான் வசந்த ருதுவாக இருக்கிறேன் என்று சொன்னதால் பகவானின் மதிப்பிற்குரிய மாதம். சித்திரை மாதத்தில் தான் ஶ்ரீ ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்தார்கள்.

ஶ்ரீ பராபவ வருட  பிறப்பு பலன்கள்

“அறுபது வருட வெண்பா” இடைக்காடரால்

பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.

ஶ்ரீ பராபவ வருஷத்திய (2026-2027) வெண்பா பலன்கள்

மிக்க பராபத்தில் மேதினியில் பின்மழையாம்

தக்க பசுக்கள் தழைக்குமே – இக்குப் பலிக்காது

நான்குவகைப் பல்லுயிர்க்கும் இன்பம்

கலிக்கா தெளவே கருது. – இடைக்காட்டார்

2026-2027-ஆம் ஆண்டிற்குரிய ஸ்ரீ பராபவ வருடத்திற்கான பொதுவான பலனைத் தெரிவிக்கும் வெண்பா இதோ:

“பாரா பவமதனிற் பாருக்கு நன்மையிலை

மாரி யொருகால் வறக்கும் – ஓரிடத்தே

வெள்ளம் மிகுமிகவே வேந்தர் கலகமுண்டாம்

உள்ளம் உவப்பார் சிலர்.”

பாடல் விளக்கம்:

இந்த வெண்பாக்கள் பொதுவாக வரவிருக்கும் ஆண்டின் பொதுவான போக்குகள் அல்லது நிகழ்வுகள் பற்றிய கணிப்புகளை அளிக்கும் ஒரு பாரம்பரிய முறையாகும். இவை பொதுவாக வானியல் மற்றும் சோதிடக் கணக்கீடுகளின் அடிப்படையில் அமைந்திருந்தாலும், இந்தக் கணிப்புகள் அறிவியல் பூர்வமானவை அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வரலாற்று ரீதியாக, இத்தகைய வெண்பாக்கள் தமிழ் இலக்கியத்திலும், பாரம்பரிய சோதிடத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை பொதுவாக நல்ல மற்றும் கெட்ட நிகழ்வுகள், இயற்கை நிகழ்வுகள், அரசியல் நிலைமைகள் போன்றவற்றை கோடிட்டுக் காட்டும்.

பஞ்சாங்கம் கணிப்பு 2026-27

பொதுப்பலன்கள் & கிரக நிலைகள் (2026-2027)

ஆண்டு பிறப்பு: சித்திரை 1 (14.04.2026) அன்று சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார்.

லக்ன நிலை: புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் லக்னாதிபதி புதன், சுக ஸ்தானத்தில் பல கிரகங்களுடன் இணைகிறார், இது புத்திசாலித்தனம் மற்றும் திட்டமிடல் சிறப்பாய் இருக்கும் என்பதைக் குறிக்கிறது.

குருவின் பார்வை:

குருவின் சாதகமான பார்வை பெரும்பாலான ராசிகள் மீது இருப்பதால், பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் மற்றும் தடையான காரியங்கள் நிறைவேறும்.

வேலை வாய்ப்பு:

வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும், ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் சாத்தியம்

ராசி வாரியான சுருக்கமான பலன்கள் 2026-2027

மேஷம்:

அதீத லாபம் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் அமையும். சிறு மனக்கசப்புகள் வந்து நீங்கும்.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் ராகு / கேது பெயர்ச்சி மூலம் ராகு தொழில் ஸ்தானத்திலும், கேது சுகஸ்தானத்திலும் அமர்ந்து உங்களின் தொழில் மேன்மை அடைய வழிவகுப்பார்கள். குருவுடன் கேது இணைவு பெறுவது பொருளாதார வளர்ச்சியை பெற்று தரும். குரு பார்வை ராகுவுக்கு கிடைப்பதால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். எதிலும் உங்களின் நேர்நிலையான எண்ணங்கள் நல்ல வளர்ச்சியை பெற்று தரும். யாரையும் நம்பி ஏமாறாதீர்கள்.

பரிகாரங்கள்:

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வெண்ணை சாற்றி நீண்ட வஸ்திரம் சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர சகல கஷ்டமும் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். தடைகள் நீங்கும்.

ரிஷபம்:

பண வரவு மற்றும் புகழ் அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை.

கார்த்திகையில் ராகு / கேது பெயர்ச்சியில் மூன்றில் கேது குருவோடு அமர்ந்து ராகு பாக்கிய தானத்தில் அமர்ந்து உங்களின் வளர்ச்சிக்கு நல்ல முக்கியத்துவம் கிடைக்க செய்வார். எடுத்த காரியம் வெற்றியை தரும். இந்த ஆண்டு முழுவதும் நற்பலன்களை பெறும் ராசிகளில் நீங்கள் முதன்மையாக இருப்பீர்கள். உடல் நலனில் முன்னேற்றம் கிடைக்கும். எதிர்கால நலனுக்கு சேமிப்புகள் செய்து வளம் பெறுவீர்கள். பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். கடந்த கால நிலை மாறி நன்மையை பெறுவீர்கள். பண புழக்கம் நன்றாக இருக்கும்.

பரிகாரங்கள்:

வியாழகிழமைகளில் விநாயகர் வழிபாடு செய்து அருகம்புல் மாலை சாற்றி தேங்காய் எண்ணெய் தீபமேற்றி பழங்கள் வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் ஜெயம் உண்டாகும்

மிதுனம்:

உங்களின் முயற்சிகளுக்கு நல்ல வெற்றி கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

வரும் கார்த்திகை மாதத்தில் ராகு / கேது பெயர்ச்சியாகி தனஸ்தானத்தில் கேது குருவுடன் இணைவதும், ராகு அட்டமஸ்தானத்தில் அமர்வதும் திருமண தடைகள் இருந்தாலும் குரு பார்வையால் திருமண தடைகள் நீங்கும் சிலருக்கு தடைகளை நீக்க பரிகாரம் செய்து சரி செய்து கொள்வீர்கள். அதிக வயதான ஆண் / பெண்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும். வெளிநாடு செல்ல விருப்பம் உள்ளவர்களுக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்கும். உங்களின் எண்ண கனவுகளை  விரைவில் நிறைவேற்றி கொள்வீர்கள். பொருளாதாரம் மேன்மை அடையும்.

பரிகாரங்கள்:

ஞாயிறு அன்று மாலை 04.30 – 06.00 மணி ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய், சிவப்பு வண்ண திரி போட்டு தீபம் ஏற்றி தயிர் அன்னத்தை நைவேத்தியம் வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.

கடகம்:

தடைகள் நீங்கி, புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கார்த்திகையில் ராகு / கேது பெயர்ச்சியாகி ஜென்ம கேது குருவுடன் இணைவதும், களத்திர ஸ்தானத்தில் ராகுவும் அமர்வது திருமண தடைகளை குரு பார்வையால் நீங்கும். பல வருடம் திருமணம் நடக்காமல் இருந்த ஆண் / பெண்களுக்கு பரிகாரம் மூலம் விரைவில் திருமணம் நடக்கும். கூட்டுத் தொழிலில் மேன்மை அடைவீர்கள். ஒரு செயலில் ஈடுபடும் போது வேறு செயல்பாடுக்கு முக்கியத்துவம் தராமல் தவிர்ப்பீர்கள். பொருளாதார நிலை வளர்ச்சியை தரும்.

பரிகாரங்கள்:

வெள்ளிகிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து வெள்ளை நிற பூ வைத்து இரண்டு நெய் தீபமேற்றி இனிப்பு பொங்கல் வைத்து வேண்டி வர உங்களின் அனைத்து காரியமும் சிறப்பாக அமையும்.

சிம்மம்:

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

கார்த்திகை மாதம் முதல் ராகு / கேது பெயர்ச்சியில் ஆறாமிடத்தில் ராகு அமர்ந்து நோயிலிருந்து விடுதலையும் கேது குருவுடன் இணைந்து போயக பலன்களையும் தந்து இந்த ஆண்டின் சிறப்பான வாழ்க்கை சூழ்நிலைகளையும் தொழில் வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சியும் கிடைக்க பெறுவீர்கள். வராத தொகைகள் வந்து உங்களுக்கு கிடைக்க பெறுவீர்கள்.

பரிகாரங்கள்:

சனிக்கிழமை, ஞாயிறுகளில் பைரவருக்கு செவ்வரளி பூ சாற்றி நல்லெண்ணெய் தீபமேற்றி தயிர் அன்னம் வைத்து வேண்டிவர சகல காரியமும் நன்மையையும், வெற்றியையும் பெற்று தரும்.

கன்னி:

சமூகத்தில் செல்வாக்கு மற்றும் மதிப்பீடு உயரும்.

கார்த்திகை முதல் ராகு / கேது பஞ்சம ஸ்தானத்தில் ராகுவும் லாபஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து உங்களின் காரியத்தை எளிதில் முடிக்கும் வலிமையை பெறுவீர்கள். பூர்வ புண்ணிய பாவங்களை சரி செய்து கொள்ள பரிகாரம் மூலம் பலன் பெறும் சந்தர்ப்பம் அமையும். குருவுடன் கேது இணைவதால் செய்யும் தொழில் நல்ல வளர்ச்சியையும் பொருளாதாரத்தில் மேன்மையும் அடைவீர்கள். உங்களின் ராசிநாதன் புதனின் பார்வை பொறுத்து உங்களின் எண்ணம் நிறைவேறும் நல்ல ஆண்டாக இருக்கும். என்றாலும் சில சோதனைகளையும் சந்திக்க வேண்டிவரும். எதிர்கால நலனுக்கு சில சவால்கள் நன்மையாக அமையும்.

பரிகாரங்கள்:

ஞாயிறு மாலை 04.30 – 06.00 ராகு காலத்தில் பைரவருக்கு முந்திரி மாலை கட்டி எலுமிச்சை தோலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தயிர் அன்னம் வைத்து வழிபட்டு வர சகல காரியமும் நல்ல வளர்ச்சியை பெற்று தரும்.

துலாம்:

புதிய முயற்சிகள் கைகூடும், நண்பர்கள் மூலம் நன்மை.

உங்களின் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பாக அமையும். தெரிந்த நபராக இருந்தாலும் தொழில் என்று வரும் போது கறாராக இருப்பது நல்லது.. ராசிநாதன் இருக்கும் நட்பு ராசியை பொறுத்து உங்களின் பலன்கள் நன்றாக இருக்கும். தொழிலிலும் உத்தியோகத்திலும் சிறந்து விளங்குவீர்கள். சரியான பாதையை தெரிவு செய்து அதன் பின்பு பயணம் செய்வது சிறப்பு. அரசியலில் சற்று பலன் குறைவாக  இருப்பதால் அமைதி காத்தல் நன்மையை தரும்.

பரிகாரங்கள்:

வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி நெய் தீபமேற்றி எலுமிச்சை அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள அனைத்து காரியமும் வெற்றியையும் பொருளாதார வளமும் பெறுவீர்கள்.

விருச்சிகம்:

பண வரவு சிறப்பாய் இருக்கும், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

13-11-2026 முதல் ராகு / கேது பெயர்ச்சி பின்பு மூன்றில் ராகுவும் பாக்கிய ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து புனித யாத்திரை சென்று வருதல். ஆன்மீக பயணம் மூலம் புதிய அனுபவம் பெறுவதும் குலதெய்வ வழிபாடு செய்து நல்ல பலன்களை பெறுவீர்கள். மூன்றாமிட ராகு உங்களை எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றியை பெற உதவி செய்வார். தொடர்ந்து பல நன்மைகளை அடைவீர்கள். யாரையும் நம்பி கொண்டிருக்காமல் உங்களின் போக்கில் பயணம் செய்வீர்கள். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். இந்த ஆண்டு முழுவதும் உஙகளின் வாழ்க்கை சிறப்பாக செழிப்பாக அமையும்

பரிகாரங்கள்:

செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியருக்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி நெய் தீபமேற்றி சிவப்பு நிற பூவால் மாலை போட்டு உங்களின் வேண்டுதலை சொல்லிவர உங்களின் எண்ணங்கள் அனைத்து சிறப்பாக நடக்கும். பொருளாதார மேன்மை பெறுவீர்கள்.

தனுசு:

ஆரோக்கியத்தில் முன்னேற்றம், குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.

13-11-2026 முதல் ராகு / கேது தனஸ்தானத்தில் ராகுவும், அட்டமஸ்தானத்தில் கேதுவும் அமர்வது கிடைத்ததை வைத்து பெருமை கொள்வது நல்லது அதிக ஆசைகளும், தேவையற்ற நண்பர்களின் நட்பையும் ஒழித்துவிட்டு குடும்ப நன்மையும், வளர்ச்சியும் பற்றி சிந்தித்து வந்தால் எல்லாம் வெற்றியை தரும். கருத்துகளை வெளிபடுத்தி கொள்வதில் தாமதமின்றி சொல்வது உங்களுக்கு நல்லது. கலைத்துறையில் செல்வாக்கு பெறுவீர்கள். வெளிநாட்டவர்களின் தொடர்புகள் மேன்மை தரும். கணவன் – மனைவி உறவு சற்று சலசலப்பாக இருக்கும். வரவுக்கு மீறிய செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

பரிகாரங்கள்:

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதும், துளசி மாலை சாற்றி வெண்மை வைத்து நெய் தீபமேற்றி தொடர்ந்து வழிபட்டு, வர சகல காரியமும் தடையின்றி சுபிட்சமாக நடக்கும். தொழிலில் வளர்ச்சி உண்டாகும்.

மகரம்:

தொழிலில் புதிய உச்சம், பொருளாதார வளர்ச்சி, அஷ்டம சனி முடிந்து நிம்மதி கிடைக்கும்.

13-11-2026 முதல் ராகு / கேது பெயர்ச்சிக்கு பின்பு ராசியில் ராகு அமர்ந்து குருவுடன்  கேதுவும் இணையும் பல சாதனைகளை பெற்று வளமுடன் இருப்பீர்கள். உங்களின் எண்ணங்கள் முழுமையாக நிறைவேறும் செய்யும் தொழிலில் வளம் பெற பல உதவிகளை பெறுவீர்கள். மன துணிச்சலுடன் எதையும் சாதித்து காட்டுவீர்கள். பொருளாதார மேன்மை உண்டாகும். கலைதுறையினருக்கு நல்ல காலமாக அமையும். கல்வியின் மாணவர்கள் சிறந்து சிறந்து விளங்குவீர்கள். புத்திர, புத்திரிகளுக்கு திருமணம் செய்வீர்கள். வெள்ளி பொருட்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும்.

பரிகாரங்கள்:

வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்திக்கு மஞ்சள் நிறை வஸ்திரத்தை சாற்றி, மஞ்சள் பூ வைத்து நெய் தீபமேற்றி இனிப்பு வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியையும், பொருளாதார வளர்ச்சியையும் பெற்று தரும்.

கும்பம்:

தன்னம்பிக்கை உயரும், சொத்து சேர்க்கை உண்டாகும்.

13-11-2026 முதல் ராகு / கேது பெயர்ச்சியாகி ராகு விரையத்திலும் கேது ஆறாமிடத்திலும் அமர்வது வெளிநாடு செல்லும் வாய்ப்பு வேலை தேடிக் கொண்டிருப்பவருக்கு அமையும். ஆறாமிடத்தில் குருவோடு கேது இணைவு பெறுவது உடல்நலனிலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைவீர்கள். ராகு அலைச்சலையும், வெகு தூர பயணத்தையும் அடிக்கடி தந்து வருவார். எவ்வளவு கடன் பட்டாலும் விரைவில் அடையும் படி வாழ்க்கை சூழ்நிலைகள் அமையும். சிறு தொழில் செய்பவருக்கு எதிர்பாராத நஷ்டம் உண்டாகும். கருத்து வேறுபாடு கொண்ட கணவன் – மனைவி மீண்டும் இணையும் வாய்ப்புகள் அமையும். இந்த ஆண்டு பணபுழக்கம் மிக நன்றாக இருக்கும்.

பரிகாரங்கள்:

ஞாயிறு மாலை 04.30 – 06.00 ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மிளகு 27 அதில் போட்டு செவ்வரளி பூ மாலை இட்டு வேண்டிக் கொள்ள எல்லா காரியமும் தடையின்றி நடக்கும்.

மீனம்:

வெளிநாடு யோகம், ஆன்மீக சிந்தனை, எதிர்பாராத பண வரவு வரும்.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் ராகு / கேது பெயர்ச்சி மூலம் ராகு தொழில் ஸ்தானத்திலும், கேது சுகஸ்தானத்திலும் அமர்ந்து உங்களின் தொழில் மேன்மை அடைய வழிவகுப்பார்கள். குருவுடன் கேது இணைவு பெறுவது பொருளாதார வளர்ச்சியை பெற்று தரும். குரு பார்வை ராகுவுக்கு கிடைப்பதால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். எதிலும் உங்களின் நேர்நிலையான எண்ணங்கள் நல்ல வளர்ச்சியை பெற்று தரும். யாரையும் நம்பி ஏமாறாதீர்கள்.

பரிகாரங்கள்:

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வெண்ணை சாற்றி நீண்ட வஸ்திரம் சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர சகல கஷ்டமும் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். தடைகள் நீங்கும்.

எலுமிச்சை தோலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தயிர் அன்னம் வைத்து வழிபட்டு வர சகல காரியமும் நல்ல வளர்ச்சியை பெற்று தரும்.

நவ நாயர்கள்:-

ராஜா-குரு, மந்திரி செவ்வாய், அர்காதிபதி சந்திரன், மேகாதிபதி சந்திரன்

நீரஸாதிபதி-சுக்கிரன், பசுநாயகன்-கோபாலன் இவர்கள் நவநாயர்களாக வருகிறார்கள்

ஸ்ஸ்யாதிபதி- சுக்கிரன், சேனாதிபதி- சந்திரன், இரஸாதிபதி- சூரியன், தான்யாதிபதி பத

ஜெகத் உலக ஜாதக் பிறப்பு நக்ஷத்திரம் சதயம் 4-ம் பாதம் கும்பம் ராசி ஆகும்.

ரிஷபம் லக்கினம் ஆகும். அம்சையில் மேஷம் லக்கினம் கும்பம்

ராசி ஆகும்.

இராஜகமாகிய சூரியன்

பசுவான் இந்த ஆண்டு ஒரு பதவி வகிக்கிறார். இவ்வாண்டு சந்திரன்

மூன்று பதவிகளை வகிக்கிறா

சூரியன் குரு வீட்டில் நட்பு பலத்துடன் இருப்பதாலும்-சந்திரன் பகவான் சேனாதிபதி-அர்க்காதிபதி

பதவி- மேகாதிபதி பதவிவகிப்பதாலும் தான்யாதிபதி புதன் மீனத்தில் நீசம் பெற்று இருப்பதாலும்

உலகத்தில் ஏதோ ஒரு இடத்தில் போர் மூளும் ஆபாயம் உள்ளது.

லக்கினத்திற்கு 8-க்கும்

11-க்குடைய குரு பகவான் இராஜா பதவி பெற்று நீச்சம் பெற்ற புதன் வீடான மிதுனத்தில் நட்பு கிரஸ|

மாக (பிரம்ம ஹத்தி தோஷம்) தனித்து அமர்ந்து 07- பார்வை மற்றும் 09-பார்வையாக 3-பதவிகளை

உடைய சந்திரனையும் மற்றும் ராகுவையும் பார்ப்பது விசேஷமானது ஆகும். சனி பகவான் புதன் வீட்ட

டையும் – குரு வீட்டையும் வீட்டையும் பார்ப்பது சிறப்பாகும். உலகத்தில் ஒரு வகை புதிய காளா

டெங்கு மலேரியா போன்ற வியாதிகள் பரவலாம். ஆன்லைன் மோசடிகள் நடைபெறும். தும்பி

பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். பயிர் தொழில் கடுமையாக பாதிக்கப்படலாம்.

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக காட்டு விலங்குகள் கிராமங்களில் தஞ்சம் அடைய நேரும்.

பாலியல் தொல்லைகள் எதிரான குற்ற வழக்குகள் போன்றவை அதிகரிக்க கூடும். மஞ்சள

ஏலக்காய், லவங்கம், மாங்காய் தேங்காய் உற்பத்தி அதிகமாக இருக்கும் இருப்பினும் விலை

உயரும். அமெரிக்காவில் வரிவிதிப்பு அதிகரிக்க நேரும்.கல்வி கட்டணம், எலக்ட்ரிகல்,

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தி அதிகமாகி விலை வீழ்ச்சிஅடைய நேரும்.

 

வங்கக்கடலில் புயல் உற்பத்தி தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் கடுமையாக பாதிக்க நேரும்.

நாமதேயம் மித்திரன் வந்ததால் அனைவரும் சுகம். ஆன்மீகவாதிகளுக்கு சௌகரியம் ஏற்படும்.

உலக நட்சத்திர தேவதை லக்ஷ்மிநாராயணர், பஞ்ச பக்ஷிகளில் வல்லூறு பக்ஷியாகவும், காலை 2–

ஜாமத்தில் ஊண் வலிமை பெற்று வருவதும், சங்கராந்தி புருஷர் வணசை நாகரணம், மித்திரன் நாமதேயம்

எருமைகடா வாகனம், வடகிழக்கு திக்கில் காள மேகம் உற்பத்தி ஆகி 4 மரக்கால் மழையும், கோச்சாரப்பட

பூர்வீக புண்ணிய ஜீவனஸ்தானதிபதியான புதன் 11-ல் நீசம் பெற்று இருப்பதால் கலவரம் போராட்ட

நடந்த வண்ணம் இருக்கும். மார்கழி மாதம் 07உ குரு வக்ரகதி ஆகுதலும், சுக்கிரன் மூடம் 10 நாட்கள்

வரை இருப்பதால் கட்டுமான பொருட்கள் சிமெண்ட் ஜல்லி மணல் பூண்டு வெங்காயம் தக்காளி இரும்ட

பெட்ரோலிய பொருட்களின் விலை சற்று குறையும்.

சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார்.

சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார்.

இவ்வருட ஆதாய பலன்

ராசி. வரவு. செலவு. பலன்

மேஷம். 11. 05. லாபம்

ரிஷபம். 05. 14. பெருநஷ்டம்

மிதுனம். 08. 11. நஷ்டம்

கடகம். 08. 02. லாபம்

சிங்கம். 05. 11. பெருநஷ்டம்

கன்னி. 08. 11. நஷ்டம்

துலாம். 05. 05. சமசுகம்

விருச்சிகம். 11. 05. பெருநஷ்டம்

தனுசு. 14. 11. லாபம்

மகரம். 02. 08. பெருநஷ்டம்

கும்பம். 02. 08. பெருநஷ்டம்

மீனம். 14. 11. சமசுகம்

ஆதாயம் 53, விரையம் 56, ஆக அதிக விரைய

03 வருவது நற்பலன் கிடையாது. வருஷ பிறப்பு செவ்வாய் கிழமை வருவது மழை அதிகமாக பொழியு=

இரவில் கன மழை பொழிந்து இடி முழக்கம் சூறாவளி காற்றுடன் மேககர்ஜனை மின்னல் கிழக –

இந்திரவில் போடுதலும், உலக ஜெகத் ஜாதகத்திற்கு ராகு மஹா தசா, சுக்கிரன் புக்தி. சுக்கிரன் அந்த

நடக்கிறது. (இருப்பு 00-05-00) கோசாரப்படி இவ்வாண்டு கும்பம் ராசிக்கு 05-ல் குரு இருப்பது உண

இடமாகும். விசுவாவசு ளு ஆண்டு சித்திரை திங்கள் 01-ஆம் நாள் செவ்வாய் கிழமை காலை ம

08.34 முடிவடைந்து அன்றே பராபவ சித்திரை மீ 012 செவ்வாய் கிழமை காலை மணி 08.35 மணி

ஸதிர (ரிஷபம்) லக்கினத்தில் சுக்கிரன் ஓரையில் பராபவ புத்தாண்டு பிறக்கிறது. ராஜகிரஹமாகி

சூரியபகவான் வர்க்கோத்ர யோகமும், அமலா யோகம் பெற்று உச்ச பலம் பெற்று உள்ளா

அரசியலில் மிக பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.

தமிழ் ஆண்டில் இயற்கை நிகழ்வுகளில் மழை வெள்ள பாதிப்பு அதிகமாக இருக்கும். 16 புயல்கள் உருவாகும். அதில் 4 புயல்கள் ஆரம்ப கட்டத்திலேயே வலுவிழந்து விடும்.9 புயல்கள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி கடும் சூறாவளி காற்றுடன் கனமழை பொழியும். வெள்ளம் அதிக அளவில் ஏற்படும். டிசம்பரில் பலமான சுனாமி தாக்ககூடும்

இவ்வாண்டு இந்தியா உலகளவில் முன்னேற்றம் காணப்படும். மத்திய மாநில அரசுகள் இணைந்து

பல நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு சமர்பிக்க நேரும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்

வதை தற்சமயம் தவிர்க்க நேரும். தங்கம் வெள்ளி பித்தளை விலை மிக வேகமாக உயரும். இராணுவத்திற்குதேவையான அதிநவீன போர் விமானங்களை வாங்க நேரும். இராணுவத்திற்கு தேவையான உபகரணங்கள் அளவுக்கு அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சூறாவளி காற்றுடன் கனமழைபொழியும். இதனால் தென் தமிழகம் கடுமையாக பாதிக்கும்.

ஏலக்காய் லவங்கம் சோம்பு பட்டை பூண்டுவெங்காயம் வாசனை திரவியங்களின் விலை உயரும். மங்களுர் மற்றும் குர்க் மாவட்டங்கள் மலைப்பகுதியில் நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சென்னை பம்பாய் தேசியநெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது.

மாநில அரசு பேட்டரிக் கார்தொழிற்சாலைகளை உருவாக்கி வேலையில்லா திண்டாட்டத்தை நிவர்த்தி செய்ய முடியும். மூணாறு.வால்பாறை, கொடைக்கானல், ஊட்டி போன்ற ஊர்களில் அதிகமான குளிர் மற்றும் பனி உண்டாகும்

புனித பயணம் செல்பவர்களுக்கு பல இன்னல்கள் ஏற்படும். கேரளா ஆந்திரா தமிழ்நாடு மஹாராஷ்ரா

தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பருவ மழை காலத்தில் உற்பத்தி ஆகி புயலாக மாறி கனமழை

பொழியும். பூச்சிகளின் ரீங்காரம் வவ்வால் தொல்லை மற்றும் பாம்புகளின் இனபெருக்கம் அதிகமாக

இருக்கும். 23 புயல் உற்பத்தி ஆகி அதில் 13 புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி சூறாவளி காற்றுடன்

கனத்த மழை பொழியும். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் பரவலாக மழை பொழியும்.

கிரக நிலை:

சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு (பாக்கிய ஸ்தானம்) மாறுவதும், குரு பகவான் மிதுன ராசியில் அமர்வதும் முக்கிய நிகழ்வுகளாகும்.

பொருளாதாரம் மற்றும்

தொழில்:

இதுவரை இருந்த தடைகள் நீங்கி, புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் தொழில் முன்னேற்றம் சிறப்பான அளவில் இருக்கும்.

குடும்பம்:

நீண்ட நாட்களாக இருந்த குடும்பப் பிரச்சனைகள், திருமணத் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கைகூடும்.

சுப காரியங்கள்:

வீடு, நிலம், வாகனம் மற்றும் தங்கம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும்.

மன நிலை:

தடைகள் நீங்கி, முடிவெடுக்கும் திறனும், துணிச்சலும் அதிகரிக்கும். எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.

இந்த ஆண்டு நடைபெறும் முக்கிய கிரக பெயர்ச்சிகள் – வாக்கிய பஞ்சாங்கப்படி:

சனிப் பெயர்ச்சி:

நிகழும் மங்களகரமான ஸ்ரீவிஸ்வாவசு வருஷம் மாசி மாதம் 22ம் நாள் (06.03.2026) வெள்ளிக்கிழமை அன்று காலை மணி 08:26க்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு மாறுகிறார். மீன ராசிக்கு பெயர்ச்சியாகும் சனி பகவான் தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியையும் – ஏழாம் பார்வையால் கன்னியா ராசியையும் – பத்தாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார்.

குருப் பெயர்ச்சி:

நிகழும் மங்களகரமான ஸ்ரீபராபவ வருஷம் வைகாசி மாதம் 12ம் நாள் (26.05.2026) செவ்வாய்கிழ்மை அன்று காலை மணி 11:46க்கு குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு மாறுகிறார். கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் விருச்சிக ராசியையும் – ஏழாம் பார்வையால் மகர ராசியையும் – ஒன்பதாம் பார்வையால் மீன ராசியையும் பார்க்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி:

நிகழும் மங்களகரமான ஸ்ரீபராபவ வருஷம் ஐப்பசி மாதம் 27ம் நாள் (13.11.2026) வெள்ளிக்கிழ்மை அன்று மாலை மணி 05:41க்கு ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறுகிறார்.

நிகழும் மங்களகரமான ஸ்ரீபராபவ வருஷம் ஐப்பசி மாதம் 27ம் நாள் (13.11.2026) வெள்ளிக்கிழ்மை அன்று மாலை மணி 05:41க்கு கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கு மாறுகிறார்

இந்தப்  புத்தாண்டு தினத்தின் சிறப்பு

புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும் தமிழர் செலவழிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது. புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர்.

மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும். வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.இத்துடன் கூட பல வீடுகளில், வெப்பத்தைத் தணிக்கும் நீர்மோர், இனிப்பைக் கூட்டும் பானகம் ஆகியவையும் அருந்தப்படுகின்றன.

பின்னர் பருப்பு, வடை பாயசம் இவற்றுடன் கூடிய பெரிய விருந்து ஒன்றை, இந்த நாளில், மக்கள், குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினருட உண்டு மகிழ்கிறார்கள்.  இவ்வாறு நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் புதிய வருடத்தை மக்கள் துவக்குகிறார்கள்.

திருவிடைமருதூரில் கார் திருவிழாவும், திருச்சிராப்பள்ளி மற்றும் காஞ்சிபுரத்தில் மற்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. “மாங்காய்-பச்சடி” என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு உணவைக் கொண்ட ஒரு சிறப்பு விருந்தை குடும்பங்கள் ஒன்றாக அனுபவிக்கின்றன. உகாதி மற்றும் விஷூவின் போது தயாரிக்கப்படும் பொதுவான இனிப்பு சுவையான “பச்சடி” போன்ற உணவு வகைகளை ஒத்திருக்கிறது. இது வெல்லம், புளிப்பு பச்சை மாங்காய், துவர்ப்பு கடுகு, கசப்பான வேம்பு மற்றும் சிவப்பு மிளகாய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் கலவையாகும்.

வழக்கத்தின் மற்றொரு ஒருங்கிணைந்த பகுதி “பஞ்சாங்கம்” வாசிப்பது. வாசிப்பு பொதுவாக குடும்பத்தின் மூத்த உறுப்பினரால் செய்யப்படுகிறது.

சித்திரையின் சிறப்பு சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான் தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர்

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம்

முன்னோர்கள் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள்.

சித்திரை 1    ஆடி 1   ஐப்பசி 1      தை 1

சூரியன் தன் பயணத்தை, கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான், சித்திரை 1 – தமிழ் புத்தாண்டு. அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான், ஆடி 1 – ஆடி பிறப்பு. மறுபடியும் கிழக்கு நோக்கி வரும்போது, ஐப்பசி 1 – தீபாவளி. மீண்டும் சரியாக தென் கிழக்கு, தை 1 – பொங்கல்.

சித்திரை 1 தமிழ் புத்தாண்டு கொன்டாடபடுகிறது

ஆடி 1 தடசினாயனம் தொடங்குகிறது

ஐப்பசி 1 துலா சங்கரமனம் அனுஷ்டிக்க படுகிறது

தை 1 உத்திராயனம கொன்டாடபடுகிறது

இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.

இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலான வேதாங்க சோதிடத்தில் அறுபது ஆண்டுகளின் பட்டியலைக் பிரபவ முதல் அட்சய வரை காணமுடிகின்றது. வடமொழி நூல்களில் அறுபது ஆண்டுகளும் அறுபது சம்வத்சரங்கள் என்று அழைக்கப்படுகின்றன

 

  1. பிரபவ 02.  விபவ    03.  சுக்ல     04.  பிரமோதூத
  2. பிரசோற்பத்தி 06.  ஆங்கீரச      07.  ஸ்ரீமுக
  3. பவ 09.  யுவ    10.  தாது       11.  ஈஸ்வர
  4. வெகுதானிய 13.  பிரமாதி       14.  விக்கிரம
  5. விஷு 16.  சித்திரபானு   17. சுபானு 18.  தாரண
  6. பார்த்திப 20. விய  21. சர்வசித்து 22.  சர்வதாரி
  7. விரோதி 24. விக்ருதி 25.  கர   26.  நந்தன
  8. விஜய 28.  ஜய  29.  மன்மத   30.  துன்முகி
  9. ஹேவிளம்பி 32.  விளம்பி  33.  விகாரி
  10. சார்வரி 35. பிலவ  36. சுபகிருது 37. சோபகிருது
  11. குரோதி 39.  விசுவாசுவ 40. பரபாவ
  12. பிலவங்க  42. கீலக 43.சௌமிய 44.  சாதாரண
  13. விரோதகிருது 46. பரிதாபி 47.  பிரமாதீச
  14. ஆனந்த 49. ராட்சச 50.  நள 51.  பிங்கள
  15. காளயுக்தி 53. சித்தார்த்தி 54.  ரௌத்திரி
  16. துன்மதி 56. துந்துபி 57.  ருத்ரோத்காரி
  17. ரக்தாட்சி 59. குரோதன  60.  அட்சய

மாதங்கள்

1     சித்திரை

2     வைகாசி

3     ஆனி

4     ஆடி

5     ஆவணி

6     புரட்டாசி

7     ஐப்பசி

8     கார்த்திகை

9     மார்கழி

10    தை

11    மாசி

12    பங்குனி

தமிழர் காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகும். தமிழ் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக கொண்ட சூரியமானத்தின் படி இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. இதனால் இவை சூரிய மாதங்கள் எனப்படுகின்றன.

இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும்.

சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு ஆகும். அத்துடன் சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும். இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடுவர்.

பஞ்சாங்கம்

சித்திரை முதல் நாள் பஞ்சாங்கம் படிப்பதால் பலவித பலன்கள் கிடைக்கும். விரதத்தைப்பற்றிச் சொன்னால், ஆயுள் விருத்தியும், திதியைப்பற்றிச் சொன்னால், செல்வச்செழிப்பும் கரணத்தைப் பற்றிச் சொன்னால் பலவித காரியபலிதமும் உண்டாகும். அதேபோல, நட்சத்திரங்களைப் பற்றிச் சொன்னால் பாவங்கள் தீரும். யோகத்தைப்பற்றிச் சொன்னால், நோய்கள் குணமடையும்.

பஞ்சாங்கம் (Panchangam) அல்லது ஐந்திறன் என்பது இந்துக் காலக் கணிப்பு முறையின் படி, கணிக்கப்படுகின்ற கால அட்டவணை எனலாம். இக் காலத்தில் பஞ்சாங்கம் சமய சம்பந்தமான விடயங்களுக்கும், சோதிடக் கணிப்புகளுக்குமே பெரிதும் பயன்படுகின்றது.

பஞ்சாங்கம் என்பது கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய புத்தகம் என்றும் வானியல் நூல் என்றும் குறிப்பிடப்படுகின்றது. நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகள் தங்கள் ஞானத்தால் சூர்ய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்ததே பஞ்சாங்கம் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

பஞ்சாங்கத்தின் முக்கிய உறுப்புகள்

1  வாரம்

2  திதி

3  கரணம்

4  நட்சத்திரம்

5  யோகம்

என்பனவாகும்.

வாரம் என்பது ஏழு கிழமைகள் ஆகும். இவை:

  1. ஞாயிற்றுக்கிழமை
  2. திங்கட்கிழமை
  3. செவ்வாய்க்கிழமை
  4. புதன்கிழமை
  5. வியாழக்கிழமை
  6. வெள்ளிக்கிழமை
  7. சனிக்கிழமை

என்னும் ஏழுமாகும்.

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.

இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.

சந்திரனின் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப் பாதையின் 30 சம கோணப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் காலத்தைக் குறிக்கும். அமாவாசையில் இருந்து வரையான வளர்பிறைக் காலத்தில் 15 திதிகளும், பூரணை தொடக்கம் மீண்டும் அமாவாசை வரும் வரையான காலத்தில் இன்னும் 15 திதிகளும் வருகின்றன. முதற் தொகுதி சுக்கில பட்சத் திதிகள் எனவும், இரண்டாம் தொகுதி கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும். அதன் 30 பெயர்களும்

வருமாறு:

  1. அமாவாசை 16. பூரணை
  2. பிரதமை 17. பிரதமை
  3. துதியை 18. துதியை
  4. திருதியை 19. திருதியை
  5. சதுர்த்தி 20. சதுர்த்தி
  6. பஞ்சமி 21. பஞ்சமி
  7. சஷ்டி 22. சஷ்டி
  8. சப்தமி 23. சப்தமி
  9. அட்டமி 24. அட்டமி
  10. நவமி 25. நவமி
  11. தசமி 26. தசமி
  12. ஏகாதசி 27. ஏகாதசி
  13. துவாதசி 28. துவாதசி
  14. திரயோதசி 29. திரயோதசி
  15. சதுர்த்தசி 30. சதுர்த்தசி

கரணம்

ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படுகின்றது. கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர்.

11 கரணப் பெயர்களும் வருமாறு:

  1. பவம்
  2. பாலவம்
  3. கௌலவம்
  4. சைதுளை
  5. கரசை
  6. வனசை
  7. பத்திரை
  8. சகுனி
  9. சதுஷ்பாதம்
  10. நாகவம்
  11. கிமிஸ்துக்கினம்

நட்சத்திரம்

நட்சத்திரங்கள் என்பது ராசிச் சக்கரத்தை ஒவ்வொன்றும் 13.33 பாகை அளவு கொண்ட 27 பகுதிகளைக் குறிக்கும். சந்திரன் பூமியைச் சுற்றிவரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்தில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. 27

நட்சத்திரங்களும் பின்வருமாறு:

  1. அச்சுவினி
  2. பரணி
  3. கார்த்திகை
  4. ரோகிணி
  5. மிருகசீரிடம்
  6. திருவாதிரை
  7. புனர்பூசம்
  8. பூசம்
  9. ஆயிலியம்
  10. மகம்
  11. பூரம்
  12. உத்தரம்
  13. அஸதம்
  14. சித்திரை
  15. சுவாதி
  16. விசாகம்
  17. அனுஷம்
  18. கேட்டை
  19. மூலம்
  20. பூராடம்
  21. உத்திராடம்
  22. திருவோணம்
  23. அவிட்டம்
  24. சதயம்
  25. பூரட்டாதி
  26. உத்திரட்டாதி
  27. ரேவதி

 

  1. அச்சுவினி 10. மகம் 19. மூலம் – கேது
  2. பரணி 11. பூரம் 20. பூராடம் – சுக்கிரன்
  3. கார்த்திகை 12. உத்தரம் 21. உத்திராடம் – சூரியன்
  4. ரோகிணி 13. அஸ்தம் 22. திருவோணம் – சந்திரன்
  5. மிருகசீரிடம் 14. சித்திரை 23. அவிட்டம் – செவ்வாய்
  6. திருவாதிரை 15. சுவாதி 24. சதயம் – ராகு
  7. புனர்பூசம் 16. விசாகம் 25. பூரட்டாதி – குரு
  8. பூசம் 17. அனுஷம் 26. உத்திரட்டாதி -சனி
  9. ஆயிலியம் 18. கேட்டை 27. ரேவதி – புதன்

யோகம்

சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி யோகம் எனப்படும். எனவே 27 நட்சத்திரங்களையும் கடக்கும் காலப்பதிகளுக்கு 27 பெயர்களைக் கொடுத்துள்ளனர். இவற்றை யோகம் என்பர்.

பஞ்சாங்கம் என்றால் என்ன?

பஞ்சாங்கம் என்பது வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும்.

அவை :

  1. வாரம் 2. நட்சத்திரம் 3. திதி 4. யோகம் 5. கரணம்

வாரம் : ஞாயிறு முதல் சனி வரையான கிழமைகள் 7-யை குறிக்கும்.

நட்சத்திரம் : அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்கள்.

திதி : ஒரு வானியல் கணக்கீடாகும். வானில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள தொலைவாகும்.

யோகம் : வானில், குறித்த இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்லுகிற மொத்த தொலைவாகும்.

கரணம் : திதியில் பாதியாகும்.

பஞ்சாங்களில் வருடம் மற்றும் மாதங்கள் இரண்டு வேறுபட்ட முறைப்படி கணக்கிடப்படுகின்றன.

  1. சௌரமான முறை
  2. சந்திரமான முறை.

பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன.

1.வாக்கிய பஞ்சாங்கம்.

2.திருக்கணித பஞ்சாங்கம்.

வாக்கிய பஞ்சாங்கத்திற்கும், திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 6 மணி 48 நிமிடம் வரை வேறுபாடு ஏற்படும்.

அமாவாசை, பௌர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும்.

வாக்கிய பஞ்சாங்கம் :

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து வந்த ரிஷpகள் ஒன்றுக்கூடி தங்களுக்குள் இருக்கும் கருத்துக்களை பரிமாறி இயற்றிய ஸ்லோகங்களில் உள்ள கணிதமுறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் இன்றளவும் எழுதப்படுவது வாக்கிய பஞ்சாங்கமாகும்.

காலமாற்றத்தினால் எவ்விதமான மாற்றத்திற்கும் உட்படாத, அதாவது திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது. நம் முன்னோர்களின் கருத்துக்களையும் அவர்கள் பின்பற்றிய கணிதமுறைகளை இன்றளவில் எள்ளளவும் மாற்றாமல் பழமையை பிரதிபலிக்கும் பஞ்சாங்கம்

வாக்கிய பஞ்சாங்கமாகும்.

தமிழ்நாட்டில் உள்ள திருத்தலங்களில் இறைவழிபாடுகள் யாவும் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் பின்பற்றப்படுகின்றன.

தமிழ்நாட்டில் வெளிவரும் வாக்கிய பஞ்சாங்கங்களான…

ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம், திருநெல்வேலி வாக்ய பஞ்சாங்கம், ராமநாதபுரம் வாக்கியப் பஞ்சாங்கம், 28-ஆம் நம்பர் பாம்புப் பஞ்சாங்கம், சிருங்கேரி மடம் பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம், ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தான வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கோயில் அனுஷ்டான பஞ்சாங்கம் என்பவை புகழ்பெற்ற வாக்கியப் பஞ்சாங்க புத்தகங்களாகும்.

திருக்கணித பஞ்சாங்கம் :

18ஆம் நூற்றாண்டிற்கு பிறகு தொலைநோக்கி உதவியின் மூலம் கிரகநிலைகளையும், சந்திரனது சுழற்சி பாதையில் ஏற்படும் சிறு சிறு வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்பட்ட பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கமாகும். சந்திரனுக்கு ரூடவ்ர்ப்பு விசை குறைவு என்பதால் மற்ற கிரகங்களின் ரூடவ்ர்ப்பு விசைக்கு ஆட்படுவதால் சந்திரனின் வட்டப்பாதையில் அவ்வப்போது வேறுபாடு ஏற்படுவதுண்டு.

லகரி அயனாம்சத்தை அடிப்படையாக கொண்டு பின்பற்றப்படும் மற்றும் கணிதமுறைகளில் சில மாற்றங்களை திருத்தி செய்து வெளியிடப்படும் பஞ்சாங்கம் திருத்தப்பட்ட கணிதம் அல்லது திருக்கணித பஞ்சாங்கம் ஆகும்.

திருக்கணிதப் பஞ்சாங்கங்கள்: ஸ்ரீனிவாசன் திருக்கணிதப் பஞ்சாங்கம், வாசன் சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம், ஆதவன் திருக்கணிதப் பஞ்சாங்கம், குமரன் திருக்கணித பஞ்சாங்கம், பாலன் திருக்கணித பஞ்சாங்கம், ராஷ்ட்ரீய பஞ்சாங்கம், சபரி சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம். என்பவை புகழ்பெற்ற திருக்கணித பஞ்சாங்க புத்தகங்களாகும்

புத்தாண்டுக் கொண்டாட்டம்

தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை மாதம் முதல் நாள் அன்று அதிகாலையிலேயே துயில் எழுவது மிகவும் நல்லது. மற்ற தினங்களைப் போல அல்லாமல் இந்த சித்திரை மாதம் முதல் தினத்தன்று புத்தாண்டு பிறக்கும் புண்ணிய காலத்தில் உடல் வெப்பம் குறைந்து நோய்கள் தீரவும் தோஷ நிவர்த்திக்காகவும்  பல மூலிகைகள் சேர்ந்த மருத்துநீரை தலையிலும் உடம்பிலும் தடவி முதலில் நீராடுவது வழக்கம்.

மருத்து நீரில் அனைவரும் குளியலை மேற்கொள்ள வேண்டும். மருத்து நீர் என்பது நமது முன்னோர்களால் தமிழ் வருடப் பிறப்பு அன்று குளிக்கும் போது பயன்படுத்தப்பட்ட ஒரு நீராகும். தற்கால தமிழர்கள் அதிகம் இதை பற்றி அறியாமல் இருக்க காரணம் இந்த மருத்து நீரை தயாரிக்க தேவையான பொருட்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்காததும், இதை தயாரிக்கும் முறை பற்றி அறியாததே ஆகும்.

எனினும் இந்த மருத்து நீரை தயாரிக்க நினைப்பவர்கள் ஒரு பாத்திரத்தில் சுத்தமான நீரை ஊற்றி அதில் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியால் செங்கழு நீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றில் சிறிதளவை போட்டு நன்கு காய்ச்சி நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டிலேயே இந்த மருத்து நீரை தயாரிக்க தெரியாதவர்கள், இப்புனித மருத்து நீரை, கோயில்களில் சேவை புரியும் அந்தணப் பெரியோர்களிடம் தயாரித்து தரும்படி கேட்டு பெற்று கொண்டு குளிக்க வேண்டும்.

குளிக்கும் போது தலையில் கொன்றை இலையையும், காலில் புங்கம் இலையையும் வைத்து குளிக்க வேண்டும். இப்படி செய்வதால் பிறந்திருக்கும் தமிழ் வருடத்திற்குரிய தோஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தோஷங்கள் நீங்க பெறும். மற்ற நட்சத்திரக்காரர்களும் இப்படி குளிப்பதால் அவர்களின் அனைத்து தோஷங்களும் நீங்கி, புதிதாக பிறந்திருக்கும் புத்தாண்டில் அதிர்ஷ்டங்கள் பெருகும். மஞ்சள் நிறம் என்பது வளமை, தெய்வீகம் மற்றும் நன்மையை குறிக்கும் ஒரு நிறமாக நமது கலாச்சாரத்தில் போற்றப்படுகிறது.

எனவே புத்தாண்டு தினத்தில் மேற்கண்ட முறையில் குளியலை முடித்த பின்பு , மஞ்சள் நிறப் பட்டாடை அல்லது மஞ்சள் கரை வைத்த வெள்ளை நிற புதிய ஆடைகளை அணிந்து கொள்வதால் பிறக்கின்ற புத்தாண்டு உங்கள் குடும்பத்தில் வளமையை கொடுக்கும் என்பது ஐதீகம்.

மஞ்சள் நிற ஆடை இல்லாவிட்டாலும் புதிய ஆடையில் ஒரு சிறு பகுதிலாவது மஞ்சள் அரைத்துப் பெற்ற கலவையை பூசி விட்டு அணிந்து கொள்வது நன்மை தரும். பின்னர் உங்கள் வீட்டின் பூஜையறையில் பூரண கும்பம், கண்ணாடி, தீபம், போன்றவற்றை வைத்து, இஷ்ட தெய்வம் மற்றும் குல தெய்வ படங்களையும் தரிசித்து வணங்க வேண்டும்.

பிறகு உங்கள் வீட்டில் இருக்கும் வயதில் மூத்தோரான தாத்தா, பாட்டி, தாய், தந்தை மற்றும் இன்ன பிற பெரியோர்களை வணங்கி, அவர்களின் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். பிறகு அருகிலுள்ள கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும்.

எந்த நாளாக இருந்தாலும், பெரியவர்களிடம் ஆசி பெறுவது நல்லது. குறிப்பாக.

1.பெற்றோர்கள்

2.வயதில் பெரியவர்கள்,

3.குரு மற்றும் ஆச்சாரியர்கள்,

4.நம் வாழ்வில் முன்னேற்றம் காட்டியவர்கள்

என இவர்களை இயன்ற அளவு பரிசு பொருட்களைக் கொண்டு சென்று வணங்கி ஆசிகள் பெறுவது நல்லது. குறிப்பாக சித்திரை மாதம் முதல் நாள் கை விசேடம், கை நீட்டம் என்று ஒரு வழக்கம் பின்பற்றப்படுகிறது. பெரியவர்கள் குழந்தைகளுக்கு அன்பளிப்பாகப் பணம் தருவதே இப்படிச் சொல்லப்படுகிறது. அதற்கென்று ஒரு நேரம் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அந்த நேரத்தில் தாத்தா, அப்பா என்று வீட்டுப் பெரியவர்களின் காலில் அனைவரும் விழுந்து ஆசி பெற்று, அவர் தரும் பணத்தைப் பெற்றுக் கொள்வார்கள். இதனால், ஆண்டு முழுவதும் பணவரவுடன் பல நன்மைகளும் ஏற்படும் என்பது நம்பிக்கை. இப்படிப் பெரியவர்கள் கொடுக்கும் பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த சித்திரை பிறப்பு வரை கூட சிலர் வைத்திருப்பர். உங்களைவிட இளையவர்களை வணங்கச் சொல்லி அவர்களுக்கு ஆசியும் நீங்களும் தாருங்கள். இப்படிச் செய்வதன் மூலம் இந்த ஆண்டு முழுதும் சிறப்பாக இருக்கும்.

இந்த புத்தாண்டு தினத்தை உங்கள் குடும்பத்தோடு சேர்ந்து கொண்டாட வாழ்த்துக்கள். உங்கள் வீட்டில் தலை வாழை இலை விருந்தை அனைவரும் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

ஆண்டாள் நாச்சியார் தமது திருப்பாவையில் “ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி உய்யுமாறு எண்ணி உகந்து” என்று பிறருக்குக் கொடுப்பதை பற்றி பெருமைப்படப் பேசுகிறாள். எந்த வழிபாடோ, சுப நிகழ்வோ, ஹோமமோ, தானம் செய்தால் தான் பூரணத்துவம் பெரும். பொதுவாகவே இது நல்ல நாளில் நல்ல இடத்தில் கொடுப்பது இரட்டிப்புப் பலன் தரும். சித்திரை வருடப்பிறப்பும் அதில் ஒரு நாள் ஆகும். நம்மால் இயன்றதை தானம் செய்தால் கிரக தோஷங்கள் நீங்கும்.

புது வருட தினத்தில் ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும். குடை தானம், செருப்பு தானம், ஆகியவற்றைச் செய்யலாம். நீர் மோர் பந்தல் அமைப்பது, தண்ணீர் பந்தல் அமைப்பது போன்றவைகளை செய்வதன் மூலம் அனைத்து தோஷங்களும் நீங்கி வாழ்வு சுகமாகும். தானம் தரும்போது மகிழ்ச்சியோடு தர வேண்டும். அகங்காரம் கூடாது.

புது வருட பிறப்பு நாளில் நல்ல செயல்களை மட்டுமே செய்யுங்கள்.  எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து விடுங்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இதுபோல ஒற்றுமையோடு ஆண்டு முழுவதும் இருக்க வேண்டிக்கொள்ளுங்கள்.

இந்த ஆண்டு சித்திரை மாதம், ஒளி பொருந்திய சிவபெருமானின் திருவாதிரை நட்சத்திரத்தில் சந்திரன் பிரகாசித்துக் கொண்டிருக்க அசுவினி நட்சத்திரத்தின் முதல் பாகையில் சூரியன் நுழைவார். பண்டிகைகளும் வழிபாடுகளும் நிறைத்த சித்திரை மாதத்தில் எத்தனை பண்டிகைகள் வரிசை கட்டி நிற்கின்றன என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கும்.

1.தமிழ் வருடப்பிறப்பு

2.மச்ச ஜெயந்தி

3.பலராமர் ஜெயந்தி

4.அட்சய திருதியை

5.ஆதிசங்கரர் ஜெயந்தி

6.லாவண்ய கௌரி விரதம்

7.கன்னிகா பரமேஸ்வரி

8.வாசவி ஜெயந்தி

9.மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம்

10.அக்னி நட்சத்திரம்

11.நரசிம்மர் ஜெயந்தி

12.சித்ரா பௌர்ணமி

13.சித்ரகுப்தன் ஜெயந்தி

14.கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்

15.வராக ஜெயந்தி

சித்திரை மாத வளர்பிறை பஞ்சமி அன்று மகா லட்சுமி பூமிக்கு வந்ததாக ஒரு புராண நிகழ்வு உண்டு. எனவே சித்திரை வளர் பிறை பஞ்சமி திதியில் மகாலட்சுமியை கலசத்தில் ஆவாகனம் செய்து மகா லட்சுமி பூஜை செய்வதன் மூலம் வீட்டில் அஷ்ட ஐஸ்வரியங்களும் சிறக்கும்.

சித்திரை மாதத்தில்தான் சிவபெருமான் திருவிளையாடல் புராணத்தில் உள்ள பல்வேறு திருவிளையாடல்களை மதுரையில் நடத்தியதாகப் புராணங்கள் சொல்லுகின்றன. எனவேதான் சித்திரை பெருவிழா மதுரையில் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீ முஷ்ணம், வராக அவதாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது இங்கு வராக மூர்த்தியாக இரண்டு கரங்களுடன், அதுவும் இடுப்பில் கையை வைத்தபடி எழிலான தோற்றத்துடன் காணப்படுகிறார். இங்குள்ள மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக்கிராமத்தினால் ஆனது. இங்கு சித்திரைப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்

இப்படி பல பல ஆன்மிக விசேஷங்கள் கொட்டிக் கிடக்கும் வசந்த காலம் சித்திரை மாதம்.

அனைவருக்கும்

மங்களகரமான பராபவ   வருடம்

தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Previous Post

அசுரன் எப்படி கிரகமானான்?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

2026 தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்

2026 தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்

April 13, 2026
அசுரன் எப்படி கிரகமானான்?

அசுரன் எப்படி கிரகமானான்?

April 7, 2026
கிரிவலத்தின் அதிசயம்  ரமண மகரிஷி கூறியது

கிரிவலத்தின் அதிசயம் ரமண மகரிஷி கூறியது

April 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »