திருவாரூர் தியாகராஜர் கோயில் – தல வரலாறு
ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது… அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான்….அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் “என்ன வேண்டும்?’ என கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைக் கேட்டார்…. தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை…
தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான்…
முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார்…
வேறு வழியின்றி இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான்…
🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸
அவற்றில் நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது… மற்ற லிங்கங்கள் சுற்றியுள்ள கோயில்களில் உள்ளன…இவை சப்தவிடங்கத்தலங்கள் எனப் படுகின்றன….
“சப்தம்‘ என்றால் ஏழு….
திருவாரூரில் வீதிவிடங்கர்,
திருநள்ளாறில் நகரவிடங்கர்,
நாகப்பட்டினத்தில் சுந்தரவிடங்கர்,
திருக்குவளையில் அவனிவிடங்கர்,
திருவாய்மூரில் நீலவிடங்கர்,
வேதாரண்யத்தில் புவனிவிடங்கர்,
திருக்காரவாசலில் ஆதிவிடங்கர்
என்ற பெயர்களில் விடங்க லிங்கங்கள் அழைக்கப் படுகின்றன…. இந்த லிங்கங்கள் கையடக்க அளவே இருக்கும்…. சப்தவிடங்கத் தலங்கள் உள்ள கோயில்களில் சுவாமியை தியாகராஜர் என்பர்….
🐘🐘🐘🦜🐄🐄🐄🦚🐘🐘🐘
வழிபாடு நேரம் 🙂
********
காலை 6 மணி – திருப்பள்ளி எழுச்சி ,பால் நிவேதனம்
காலை 7.30 மணி – மரகத லிங்க அபிஷேகம்
காலை 8 மணி – முதற் கால பூஜை….
மதியம் 11.30 மணி – மரகத லிங்க அபிஷேகம்…
பகல் 12 மணி – உச்சிக்கால பூஜை….
பகல் 12.30 மணி – அன்னதானம்..
மாலை 4 மணி – நடை திறப்பு
மாலை 6 மணி – சாயரட்சை பூஜை…
இரவு 7.30 மணி – மரகத லிங்க அபிஷேகம்
இரவு 8.30 மணி – அர்த்தசாம பூஜை…
🌐💠♥️🔷🔸🔔🔸🔷♥️💠🌐
பிரதான மூர்த்திகள்
*********
திருவாரூர் ஆலயத்தின் மூலவர் வன்மீகர்….அவர் அருகே அன்னை சோமகுலாம்பிகை இருக்கிறாள்… இறைவன் சூரிய குலம்..அம்பிகை சந்திர குலம்… வன்மீகரின் வலப்பக்கத்தில் தனிச் சந்நிதியில் ஸ்ரீதியாகராஜர்….
365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய தியாகராஜர் கோயில் திருவாரூர் தியாகராஜர் கோயில்!!!!!
ஆரூர் தியாகேசா போற்றி போற்றி
“ஓம் நமசிவாய வாழ்க”
நாதன் தாள் வாழ்க










