• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

வீட்டில் செல்வம் பெருக கனகதாரா ஸ்தோத்திரம்.

siddharbhoomi by siddharbhoomi
February 15, 2023
in ஆன்மிகம்
0
வீட்டில் செல்வம் பெருக கனகதாரா ஸ்தோத்திரம்.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

வீட்டில் செல்வம் பெருக கனகதாரா ஸ்தோத்திரம்.

21 நாட்கள் இந்த பூஜையை செய்ய வேண்டும் என்று தொடங்கிய நாள் முதலே,

உங்களுடைய பண கஷ்டங்கள் தீரும். அவ்வளவு அற்புதம் வாய்ந்த, பல பேருக்கு

பலன் கொடுத்த, மகா பெரியவா அருளிய இந்த வழிபாடு பற்றி உங்களுக்கு

தெரியுமா?

பணக்கஷ்டம் வந்த உடனேயே என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியாமல்

மனது அலைபாயும். இதை செய்தால் பணம் வந்து விடுமா, அதை செய்தால் பணம்

வந்து விடுமா என்று, எதேதோ செய்து பார்ப்போம். ஆனால் பணம் வந்த பாடாக

இருக்காது. உங்களுக்கு பணகஷ்டமா. அவசர தேவைக்கு பணம் வேண்டுமா.

கடனை திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிக்கிக் கொண்டீர்களா.

எதுவுமே செய்யாதீங்க. 21 நாட்கள் இந்த பூஜையை செய்ய வேண்டும் என்று

மனதார நினையுங்கள். ஒரு நல்ல நாளாக பார்த்து பூஜையை தொடங்குங்கள்.

நீங்கள் பூஜையை தொடங்கிய முதல் நாளே எழுதி வைத்துக் கொள்ளலாம்.

உங்கள் பண கஷ்டம் தீர்ந்தது என்று. அவ்வளவு அற்புதம் வாழ்ந்த சக்தி வாய்ந்த

மஹா பெரியவா அருளிய ஒரு வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த பதிவின்

மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முழுக்க முழுக்க நம்பிக்கையோடு

ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு பணக்கஷ்டம்

தீருவது உறுதி.

வீட்டில் செல்வம் பெருக கனகதாரா ஸ்தோத்திரம்:

தன்னிடம் கஷ்டம் என்று வருபவர்களுக்கு, குறிப்பாக பண கஷ்டத்தோடு

வருபவர்களுக்கு இந்த வழிபாட்டை தான் மகா பெரியவா செய்ய சொல்லி

சொல்வாராம்.

அப்படி இந்த வழிபாட்டை நம்பிக்கையோடு செய்த பல பேர் கைமேல் பலனை

பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழிபாடு என்ன தெரியுமா. ஆதிசங்கரர் நமக்கு கொடுத்த கனகதாரா

ஸ்தோத்திரம் மகாலட்சுமி வழிபாடு.

இந்த மகாலட்சுமி வழிபாட்டை எப்படி செய்வது. தினமும் காலையில் எழுந்து

சுத்தமாக குளித்துவிட்டு காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த வழிபாட்டை

செய்து முடித்து விட வேண்டும். 21 நாட்களும் உங்களுடைய வீடு சுத்தமாக இருக்க

வேண்டும்.

அசைவம் சாப்பிடக்கூடாது. பூஜை அறையில் மகாலட்சுமியின் திருவுருவப்படம்,

அப்படி இல்லை என்றால் வேறு ஏதாவது அம்பாளின் திருவுருவப்படம் இருந்தால்

அந்த படத்திற்கு பூக்களை சூட்டி, ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இரண்டு

கற்கண்டாவது நெய்வேத்தியம் வைத்து, இறைவனுக்கு முன்பு நீங்கள் ஒரு

சுத்தமான விரிப்பை விரித்து, அதன் மேலே அமர்ந்து இந்த கனகதாரா

ஸ்தோத்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

இப்போது கனகதாரா ஸ்தோத்திரம் தமிழிலேயே நமக்கு இருக்கின்றது. இன்று இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில், கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில், வலைதளத்தில் போய் கனகதாரா ஸ்தோத்திரம் என்று போட்ட உடனேயே உங்களுக்கு இந்த சோஸ்திரம் தமிழில் கிடைத்துவிடும்.

படிக்கத் தெரிந்தவர்கள் கட்டாயமாக இந்த கனகதாரா ஸ்தோத்திரத்தை பூஜை செய்ய வேண்டிய 21 நாட்களும் காலையில் பூஜையறையில் அமர்ந்து படிக்க வேண்டும். பணக்கஷ்டம் தீருவதற்கு இந்த பாடல் நமக்கு கிடைத்த ஒரு வரம்.

ஸ்தோத்திரத்தை படித்து முடித்துவிட்டு மகாலட்சுமி தாயிடம் உங்களுக்கு இருக்கும் பண பிரச்சனையை சொல்லி, அது சரியாக வேண்டும் என்றும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். எவ்வளவு பெரிய பண கஷ்டமாக இருந்தாலும் அது இந்த 21 நாட்களில் நிச்சயம் சரியாகிவிடும்.

திருமணத்திற்கு பணம் தேவை, அல்லது வீடு கட்ட லோன் தேவை, அல்லது குழந்தைகளுடைய மேல் படிப்புக்கு பணம் தேவைப்படுகிறது, அல்லது வருமானத்திற்கு வழியில்லை, வறுமையில் வாடுபவர்கள் இந்த பாடலை படித்தால் கூட அவர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் வருவாயைக் கொண்டு வரக்கூடிய வேலையை அந்த மகாலட்சுமி தாய் செய்து விடுவாள். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த பாடல் தான் இது.

‘மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ!’ என்ற இந்த வரிகளில் கனகதாரா ஸ்தோத்திரம் பாடல் தமிழில் தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் எழுத படிக்கத் தெரியாதவர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு பணக்கஷ்டம் இருந்தாலும் இந்த பூஜையை செய்ய சொல்லுங்கள்.

கனகதாரா ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் ஒலிக்க விட வேண்டும். அந்தப் பாடல் ஒலித்தாலே உங்களுடைய வீட்டில் செல்வம் மழை பொழிவது நிச்சயம்.

அதில் எந்த சந்தேகமும் இல்லை. 21 நாட்கள் இந்த பூஜையை முடித்த பின்பும் கூட, தினம் தோறும் காலையில் இந்த கனகதாரா ஸ்தோத்திரத்தை வீட்டில் ஒலிக்க விடலாம். வீட்டுக்கு அத்தனையும் லட்சுமி கடாட்சம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த வழிபாட்டை செய்து பலன் பெறலாம்.

Previous Post

ஆன்மீக நண்பர்கள் கோவில் விபூதி கவர் பிரிண்ட் செய்ய தொடர்பு கொள்ளுங்கள் +91-9843760081

Next Post

1990களில் நாம் பார்த்த திருமண வீடு

Next Post
1990களில் நாம் பார்த்த திருமண வீடு

1990களில் நாம் பார்த்த திருமண வீடு

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

‘ஊர்மெச்ச வாழ வேண்டும்’ என்கின்ற ஆசை உள்ளவர்கள்?

‘ஊர்மெச்ச வாழ வேண்டும்’ என்கின்ற ஆசை உள்ளவர்கள்?

February 23, 2026
கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

February 22, 2026
மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

February 21, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »