ஒரு மரத்துப் பக்கம் போ, மரத்தோடு பேசு. மரத்தைத் தொட்டுப் பார்.
மரத்தை அணைத்துக்கொள், மரத்தை உணர்ந்து பார். மரத்துக்குப் பக்கத்தில்
சும்மா உட்கார்ந்துகொள். அந்த மரம் உன்னை உணர்ந்து கொள்ளட்டும்.
நீ நல்லவன் என்பதையும் உன்னால் தனக்குக் கேடு ஏதும் இல்லை
என்பதையும் அந்த மரம் உணரட்டும் விடு. இப்படி மெதுமெதுவாகத்
தோழமை வளரும்.
நீ அருகே வரும்போது மரம் தன் இயல்பில் நல்ல
தொரு மாற்றத்தை உணர்வதைத் தெரிந்துகொள்வாய்.
நீ அருகே வரும்போது அந்த மரத்தின் பட்டையில் பிரமாத
மானதொரு ஜீவசக்தி ஓடுவதைத் தெரிந்து கொள்வாய்.
நீ அதைத் தொடும்போது ஒரு குழந்தையின் ஒரு காதலியின் மகிழ்ச்சியை அந்த மரம்
உணர்வதைத் தெரிந்து கொள்வாய், அருகே உட்காரும்போது
என்னென்னவோ தெரிந்து கொள்வாய்.
வெகு சீக்கிரத்திலேயே நீ வருத்தப்படும் போதெல்லாம் அந்த மரத்தை நோக்கிப் போக ஆரம்பித்துவிடுவாய்.அப்படிப் போய்ச் சேரும்போது உன் வருத்தம் தொலைந்து போவதைஉணர்வாய்.
அப்போதுதான் நீயும் மரமும் ஒன்றை ஒன்று சார்ந்தவர் என்பதை உணர்வாய். நீ மரத்தை மகிழ்விக்க மரம் உன்னை மகிழ்விக்கிறது. வாழ்க்கை முழுக்க இந்தச் சார்புடைமை நிறைந்திருப்பதை உணர்வாய்.
இந்தச் சார்புடைமையை நான் கடவுள் என்கிறேன். லாவோட் சூ இதையே
தாவோ என்கிறார். இந்த ஒட்டுமொத்தமான சார்புடைமையைத்தான்.
கடவுள் என்கிறவர் எங்கோ இருக்கும் யாரோ ஒருவர் அல்ல. இந்தச்
சார்புடைமைதான் கடவுள், வேதங்கள் இதையே ரித் என்கின்றன. நெறி
என்று பொருள்கொள். அதற்கு எப்படி வேண்டுமானாலும் பெயர்.
வைத்துக்கொள்.
இந்த ஒருமித்த சார்புடைமைதான் எல்லாமும் என்று,
தெரிந்துகொண்டால் சரி. என் அணுக்கத்தில் சார்புடைமையின்
சத்தியத்தைத் தெரிந்து கொண்டால் நீ அனைத்தையும் தெரிந்து
கொண்டவனாகிப் போகிறாய்.
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்-
சித்தர் பூமி தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!
உங்கள் நண்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!
+91-73050 18180









